Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

ணைப் போலவே, பெண்ணுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்' என தமிழக அரசுக்கு சமீபத்தில் உத்தரவு வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

கால்நடை பராமரிப்புத் துறையில் உதவி இயக்குநராக இருந்து, பணிக்காலத்திலேயே இறந்துபோன ஒருவரின் மகள், ரேணுகா. பணிக்காலத்தில் இறந்தால், வாரிசுகளில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை தருவது வழக்கம். ஆனால், ’ரேணுகா திருமணம் ஆனவர். எனவே, கருணை அடிப்படையில் அவருக்கு வேலை தரமுடியாது' என்று மறுத்துவிட்டது கால்நடைத் துறை.

நமக்குள்ளே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசாங்கம் கருணை காட்டாத நிலையில்தான், தன் கருணைப் பார்வையை ரேணுகா பக்கம் திருப்பியிருக்கிறது உயர் நீதிமன்றம். கூடவே, ’ஆண் பிள்ளை என்றால் திருமணம் ஆகிவிட்டாலும், கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. அதே உரிமையை, பெண் என்பதால் வழங்காமல் இருப்பது சரியல்ல' என்று குட்டியும் காட்டியிருக்கிறது.

பெண் என்பதாலேயே இங்கே காலகாலமாக மறுக்கப்பட்டு வரும் உரிமைகளில் ஒன்றை, சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கும் இந்தப் பெண், பலருக்கும் வழிகாட்டியாக நிற்கிறார் என்று சந்தோஷப்படும் அதேவேளையில், ’மறுக்கப்படும் உரிமைகளுக்காக, இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் போராடிக்கொண்டிருக்குமோ இந்த பெண் இனம்' என்கிற கவலையும் ஏற்படுகிறது.

இன்னமும்கூட நிறைய விஷயங்களில் பெண்களுக்கான உரிமைகள் இங்கே சரிவர வரையறுக்கப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க... போதிய விழிப்பு உணர்வும், ஆதரவும் இல்லாமையால், இதுதான் என்று வரையறுக்கப்பட்ட விஷயங்கள்கூட பெண்களுக்கு கைகூடாமல் இருக்கின்றன.

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள், திட்டங்கள் பலவும், ஒரு பால் பார்வையிலேயே இன்றைக்கும் விட்டுவைக்கப்பட்டிருப்பதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம். இதற்காக நீதிமன்றங்களைத் தேடி ஓடிக்கொண்டிருக்க எத்தனை பேரால் முடியும்? நீதிமன்றத்துக்குப் போய்தான் தீர்வு காண வேண்டும் என்று விட்டுவைத்திருப்பதும் எந்த அளவுக்கு சரி?

அரசாங்கம் யோசிக்கட்டும்!

உரிமையுடன்,

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism