Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

‘மார்கழியில் குளிச்சுப்பாரு, குளிரு அடங்கிப் போகும்...’ - ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலை சமீபத்தில் எஃப்.எம் ரேடியோவில் கேட்டுக்கொண்டிருந்தபோது, காலை நேரத்து மென்குளிர் காற்று, சீக்கிரமே வரப்போகும் மார்கழியை நினைவடுக்குகளில் மீட்ட ஆரம்பித்துவிட்டது.

நமக்குள்ளே...

சிறு வயதுகளில் பாட்டியின் வீட்டுக்குச் செல்லும்போது... வீதிதோறும் மஞ்சள் நிறத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் பூசணிப்பூ கோலங்களைப் பார்க்க, அவ்வளவு அழகாக இருக்கும். பெரிய பெரிய கோலங்களும், அவற்றுக்குத் தகுந்தாற்போல சாணத்தைப் பிடித்து வைத்து, அதில் பூசணிப் பூவை செருகி வைத்தும் வீடுகள்தோறும் விழாக்கோலம் காணும். இப்படி வாசலில் கோலம் போடுவதற்காக... பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே பள்ளிக்கூட நோட்டுப் புத்தகங்கள், கோலக் கிறுக்கல்களால் நிறைந்திருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவோம். நடுக்கும் குளிரில் உதடுகள் டைப் அடிக்க அடிக்க, ஒரு குளியல் போடுவதிலிருக்கும் சுகமே அலாதி! அடுத்து, அக்கம்பக்கத்து வீட்டு அக்காக்கள் எல்லாம் பாட்டியோடு சேர்ந்து திருப்பாவை பாடுவது... இனிமையோ இனிமை! இதுமட்டுமா... பூக்களின் ஸ்பரிசம்; சாம்பிராணி - ஊதுபத்தி வாசம்; மிளகு மணத்துடன் சுடச்சுட கிடைக்கும் வெண்பொங்கல் என மொத்த மார்கழியும் அழகோ அழகுதான்!

தை என்றால் பொங்கல், சித்திரை என்றால் கோடை என ஒவ்வொரு மாதத்துக்குமே ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இப்படி உணர்வுபூர்வமான பிணைப்பும் கொண்டதாக இருக்கும் மாதங்களில் மார்கழிக்குத்தான் முதலிடம்!

காலையில் சீக்கிரமாக எழுவதும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்... ஆன்மிகம் சார்ந்த விஷயங்களாக பார்க்கப்படுவது ஒருபுறமிருந்தாலும், அந்த அதிகாலையில் கண்விழிப்பது... சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நாள் முழுக்க உற்சாகமாக இருக்க வைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆக, ஒட்டுமொத்தமாக முடக்கிப் போடும் குளிரை வெல்லக்கூடிய சக்தியை இந்த நிகழ்வுகள் கொண்டுவந்து சேர்க்கின்றன என்பதுதானே உண்மை!

அடுத்த தலைமுறைகளும் தொடர்ந்து அனுபவிக்கட்டும், மார்கழி ஆனந்தத்தை!

உரிமையுடன்,

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism