Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

"அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் என்னுடைய முகம் வாடியிருந்தால், 'என்ன பிரச்னை?’ என்று ஆரம்பித்து அக்கறையோடு என் அம்மாவும் பாட்டியும் முன்வைக்கும் கேள்விகளே, எத்தனை பெரிய பிரச்னையாக இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கான வழியைக் காட்டிவிடும். 'பத்தாம் வகுப்பு தாண்டாத அம்மாவாலும், ஐந்தாம் வகுப்புகூட முடிக்காத பாட்டியாலும் எப்படி இத்தனை தீர்க்கமாகவும் செறிவாகவும் சிந்திக்க முடிகிறது’ என்று பலமுறை வியந்திருக்கிறேன்.

நமக்குள்ளே...

இருவரும் கல்லூரி சென்று படிக்கவில்லை. ஆனால், இலக்கியங்களையும், இதிகாசங்களையும் சூழ்நிலைக்குப் பொருத்தமான முறையில் அவர்கள் மேற்கோள் காட்டி பேசும்போது... 'ச்சே, புத்தகங்கள் படிப்பதனால் ஏற்படும் சுகத்தை, அவர்களைப்போல நம்மால் அனுபவிக்க முடியவில்லையே’ என்று தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும்''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி ஒரு கடிதம், ஒரு வாசகியிடமிருந்து சில மாதங்களுக்கு முன் வந்தது.

அந்தத் தோழியை தொடர்புகொண்டபோது, பிரபல தொலைபேசி நிறுவனமொன்றின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிவதாகச் சொன்னார். போனிலேயே சல்யூட் வைத்தேன். பின்னே, இந்த வாசகியின் வேலையானது... காவியங்கள் பேசும் அம்மா, பாட்டிகளுக்கு குறைந்தது இல்லையே! கடும்கோபத்தோடு வருகிற வாடிக்கையாளர்களை சாந்தப்படுத்தி, அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு, பிரச்னைக்குத் தீர்வு சொல்லிச் சொல்லியே களைத்தாலும், கடைசிவரை புத்துணர்ச்சியோடு இருப்பது எத்தனை பெரிய சவால் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

'தினம் தினம் நூற்றுக்கணக்கான மனிதர்களின் மனங்களைப் படிப்பதனால், அவர்களை உங்களால் சமாளிக்க முடிகிறது. அதனால் உங்களின் வாசிப்பும் மிகமிகச் சிறந்த வாசிப்பே!’ என்று சொல்லி, அவர் வற்புறுத்திக் கேட்டதனால் நான் மிகவும் ரசித்த சிறுகதை தொகுப்பைப் பரிந்துரைத்தேன்.

ஆறு மாதத்துக்குப் பிறகு அந்த வாசகியிடமிருந்து போன். 'என் வலைதளத்துக்கு சென்று பாருங்கள். இரண்டு சிறுகதைகளை பதிவேற்றம் செய்திருக்கிறேன்’ என்று சந்தோஷம் பூரிக்கச் சொன்னார்.

'நீங்கள் பரிந்துரைத்த புத்தகத்தில் முதல் கதை எனக்குப் பிடித்திருந்ததால், வலுக்கட்டாயமாக நேரம் ஒதுக்கி அடுத்தடுத்த கதைகளைப் படித்தேன். பிறகு, சக ஊழியர் பரிந்துரைத்த சுயசரிதையைப் படித்தேன். வாசிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட நான், இப்போது எழுதும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்’ என்றபோது, அவருடைய குரலில் அத்தனை தன்னம்பிக்கை ததும்பியது!

சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி, நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதை உங்களிடம் பகிர்ந்துகொள்வது பொருத்தமாகத்தானே இருக்கும் தோழிகளே!

உரிமையுடன்,

 ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism