Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

ரு நாள் டாக்ஸியில் பயணித்தபோது, டிரைவரிடம் இருந்த போனைப் பார்த்து திகைத்துவிட்டேன். புதிய மொழியில் சொல்வதென்றால் மெர்சலாயிட்டேன். விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் அது! என் ஆச்சர்யத்தைப் புரிந்துகொண்ட டிரைவர், 'ஆன்லைனில் ஆஃபர் போட்டிருந்தாங்க. இருபதாயிரம் ரூபாய் போனை, யார் பதினைந்தாயிரத்துக்கு கொடுப்பாங்க. யோசிக்கவே இல்ல... விழுந்தடிச்சு வாங்கிட்டேன்ல’ என்றார் சாதித்துவிட்டவராக.

நமக்குள்ளே...

முன்பெல்லாம் சினிமா, அரசியல், கிரிக்கெட் என்றே பேசிக்கொண்டிருந்த பலரும், இப்போது, ’எங்கே... எந்தப் பொருளுக்கு... எத்தனை சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறார்கள்’ என்றுதான் பேசுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில மாதங்களுக்கு முன்பு வரை, 'ஷாப்பிங் ஷாப்பிங் என்று பணத்தை விரயம் செய்கிறார்கள் பெண்கள்’ என்று எரிச்சலோடு புலம்பிக்கொண்டிருந்த ஆண்களில் பலரும்கூட, 'இப்போது என்ன ஆஃபர்?’ என்று மணிக்கு ஒரு தரம் ஆன்லைனில் செக் செய்வதைக் கவனிக்க முடிகிறது.

பக்கத்துவீட்டு நபரோடு துணைக்கு ஷாப்பிங் செல்லும் ஒருவர், அங்கே ஏதோ ஒரு பொருளைப் பார்த்து ஆசைப்பட்டு, பக்கத்துவீட்டு நபரிடமே கடன் வாங்கி, அந்தப் பொருளை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது... அவருக்கு எத்தனை குற்றஉணர்வு இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் அவரைக் கேள்விகளால் எப்படி எல்லாம் வாட்டி எடுப்பார்கள். ஆனால், இதைத்தான் இப்போது ஆண், பெண் என்ற பேதமில்லாமல் பலரும், 'ஆன்லைன்’ ஷாப்பிங் மூலம் செய்து கொண்டுள்ளனர்.

ஒரு முறை ஆன்லைன் ஷாப்பிங் உள்ளே நுழைந்துவிட்டால், அந்த கம்பெனிகள் தொடர்ந்து நம் பின்னால் வந்து... 'இன்று இதற்கு டிஸ்கவுன்ட்! நாளைக்கு அதற்கு ஆஃபர்! இது, உங்களுக்கு மட்டும் நாங்கள் தரும் ரகசிய தள்ளுபடி!’ என்றெல்லாம் மொபைல், மெயில், வாட்ஸ்ஆப் என்று பசப்பு வார்த்தைகளால் வீசும் வலை, நம் பாக்கெட்டை நோக்கித்தான்!

தேவைக்கு வாங்கலாம் தப்பில்லை. தேவையே இல்லாமல் கவர்ச்சிக்கும் தள்ளுபடிக்கும் மயங்கி வாங்குவது?

யோசிக்கலாம்தானே தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism