Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

ட்டே எட்டு வீடுகளைக் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் உரையாடலில் இருந்து சில பகுதிகளை வாசகி ஒருவர் எழுதி அனுப்பி இருந்தார்.

நமக்குள்ளே...

'இத்தனை நாளா நம்ம குடியிருப்பில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை. இன்னிக்கு காலையில மோட்டார் போட்டா, அடுத்த நாள் வரை தாராளமா தண்ணீர் வரும். ஒரு வாரமா சாயங்காலத்துக்குள்ளேயே தீர்ந்துடுது.’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'சாயங்காலம் போட்டாலும், அடுத்த நாள் காலையில டாய்லெட் போறதுக்கே தண்ணீர் இருக்க மாட்டேங்குது.’

'மேல் வீட்டுக்கு புதுசா வந்திருக்கிற பேச்சுலர் பசங்க இஷ்டத்துக்கு தண்ணியை செலவு செய்றாங்க.’

'வெயில் காலம்னு எல்லாரும் ரெண்டு வேளை குளிக்க ஆரம்பிச்சுட்டாங்க.’

'இனி, ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் மோட்டார் போட முடியும். கூடுதலா வேணும்னா கைபம்ப்ல அடிச்சு எடுத்துக்கோங்க.’

இப்படியாக நீண்ட உரையாடலின் கடைசியில், பெரியம்மா ஒருவர் சொன்ன கருத்து, அனைவரின் கண்களையும் அகலமாக்கியது.

'நிலத்தடி நீர் என்பது நடப்பதற்கு கால்கள் இல்லாத மரம், செடி  கொடிகளுக்குத்தான். கால்களைக் கொண்ட விலங்கு, மனிதர் அனைத்துமே குளம், குட்டை, ஆறுனு நடந்து போய்த்தான் தண்ணீர் குடிக்கணும். இதுதான் இயற்கையோட நியாயம்னு நான் படிச்சிருக்கேன். இப்ப நாம் போர்வெல் போட்டு குடிக்கிறது சுற்றி இருக்கும் மரம், செடி  கொடிகளோட தண்ணீர்!’

போதிமரம் போல... இந்த உரையாடல், ஏராளமான கேள்விகளை அலை அலையாக என்னை நோக்கி அனுப்பிக்கொண்டே இருக்கிறது. நம்மில் எத்தனை பேர் தண்ணீரைச் சிக்கனமாக செலவு செய்கிறோம்... தண்ணீர் சிக்கனம் பற்றி குழந்தைகளுக்கு முறையாகச் சொல்லித் தருகிறோம்... போர் வெல்லில் தண்ணீர் சுரக்க வேண்டி, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சரியாகப் பராமரிக்கிறோம்?

'தண்ணீரை பூமியில தேடாதீங்க. வானத்துல தேடுங்க’ என்று மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுதும் தலைபாடாய் அடித்துக்கொண்டது, உயிர் நீராக இருக்கும் மழைநீரின் மகத்துவத்தைப் புரியவைக்கத்தான்!

இந்த ஒற்றை வாக்கியத்தை, எத்தனை பேர் சரியாகப் புரிந்துகொண்டோம் என்கிற கேள்வி, பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்