Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
நமக்குள்ளே...

``சரிகைச் சேலை, முகம் நிறைந்த மஞ்சள், கல்வைத்த மூக்குத்தி என்று அம்சமாக வந்திருந்த ஒரு பெண்ணை, சமீபத்தில் பியூட்டி பார்லரில் சந்தித்தேன். புருவத்தை த்ரெடிங் செய்வதற்காக, அவருடைய சகோதரி அவரை அழைத்து வந்திருந்தார். ஹேர் கட்டிங், ஃபேஷியல், ஸ்பா என விதம்விதமாக அங்கே கலக்கிக்கொண்டிருந்த மற்ற பெண்கள் மீது மிரட்சியான பார்வையை வீசியதிலிருந்தே நன்றாகப் புரிந்தது... மூக்குத்திப் பெண், முதன்முறையாக பார்லருக்கு வந்திருப்பது!

த்ரெடிங் செய்வதற்காக புருவத்தின் மேல்புறத்தை அழுத்திப் பிடிக்கும்படி சொன்னபோது, எப்படிப் பிடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை. பியூட்டிஷியன் இரண்டு முறை சொல்லிக்கொடுத்தும் புரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`என்ன நீங்க இதுகூட தெரியாம இருக்கீங்களே! பாருங்க, முகத்துல இவ்ளோ மஞ்சள் பூசி இருக்கீங்க. இதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன். இந்தக் காலத்துல இப்படி ஸ்டோன் வெச்ச மூக்குத்தி போடுறீங்க. தலைக்கு இவ்ளோ ஹேர் ஆயில் அப்ளை பண்ணா, பொல்யூஷன்ல தலைமுடி சீக்கிரம் அழுக்காயிடும். அப்புறம் இவ்ளோ பெரிய பார்டர் சேலை உங்களுக்கு நல்லாவே இல்ல’ என்று அடுக்கிக்கொண்டே போனார் பியூட்டிஷியன்.

`நான் எவ்ளோ சொல்லிட்டேன்... `லுக்'தான் முக்கியம்னு! இது இவளுக்கு தெரியமாட்டேங்குது’ என்றார், அவரை அழைத்து வந்திருந்த சகோதரியும் தன் பங்குக்கு! இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்கக் கேட்க முகம் மாறிக்கொண்டே இருந்த அந்தப் பெண், அங்கே தலைகுனிந்து நின்றாள்...’’

- இந்தச் சங்கதியை பக்கத்து வீட்டுத்தோழி என்னிடம் சொன்னபோது, எனக்குத் தோன்றியது இதுதான்.

பார்லருக்கு வருவதாலேயே ஒருவரின் `லுக்’ மாறிவிடும் என்பதுகூட ஒரு வகையில் மூடநம்பிக்கைதான். `லுக்' என்று சொல்லக்கூடிய வெளித்தோற்றத்தை அழகு நிலையத்திலிருந்து மட்டுமே பெற்றுவிட முடியாது. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், சுகாதாரமான நடவடிக்கைகள், அயராத உடல் உழைப்பு (உடற்பயிற்சி), நிம்மதியான தூக்கம், உற்சாகம் ததும்பும் மலர்ந்த முகம், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னம்பிக்கை என முக்கியமான பல அம்சங்கள் சம்பந்தப்பட்டதுதானே `லுக்'!

திருமணம், ரிசப்ஷன் என விசேஷங்களுக்கு அழகு நிலையங்களில் போட்டுவிடப்படும் ஒப்பனை... இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே தாங்கக்கூடிய தற்காலிக ஏற்பாடுதான். ஆனால், எந்த நேரத்திலும் இயல்பான அழகுடன் தோற்றத்தை  வைத்திருப்பதுதானே உண்மையான அழகு... அந்த மூக்குத்திப் பெண் போல!

உரிமையுடன்
ஶ்ரீ
ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism