Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
நமக்குள்ளே...

செய்தித்தாள்களில் கொட்டிக் கிடக்கும் க்ரைம் செய்திகளில் ஒன்றாக கடந்து செல்ல முடியாத கொடுஞ்செய்தி இது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்பகதூரின் தங்கையும் எதிர்வீட்டு சரண்யாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தோழிகள். அடிக்கடி தோழியைப் பார்க்க வந்துபோன சரண்யாவை, காதல் வலையில் சிக்கவைத்தான் ராஜ்பகதூர். ஒருநாள் அவனுடைய செல்போனை தற்செயலாகப் பார்த்த சரண்யா, பெண்கள் பலருடன் அவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்து, தன் பெற்றோரிடம் சொல்லி வேதனைப்பட்டார். `‘நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னயே தெரிந்ததே’’ என்று ஆறுதல் சொன்னவர்கள், வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வில்லனாக மாறிய காதலன், செல்போன் படங்களை மாப்பிள்ளையிடம் காட்டி திருமணத்தையே நிறுத்திவிட்டான். சரண்யாவின் குடும்பம், தற்கொலையின் விளிம்பிலிருந்து மீட்கப்பட, அதன்பிறகு நடந்தது, சினிமாவை மிஞ்சும் கொடுமை.

ராஜ்பகதூரின் அப்பா ராஜாராம், ‘`எங்களை மன்னிச்சுடும்மா. நீ எங்க வீட்டுக்கு வா. உன் கண் முன்னயே போட்டோக்களை அழிச்சுடறோம்’’ என்று போனில் உருக, நம்பிப் போனார் சரண்யா. ஆனால், `‘என் பையனை லவ் பண்ணிட்டு, வேற ஒருத்தனை கட்டிக்குவியா’’ என்று சீறிய ராஜாராம், சரண்யாவின் கன்னத்தில் அறைந்து ரூமுக்குள் தள்ளினார். `‘இனி இவளை எவன் கட்டிக்கிறான்னு பார்க்கலாம்’’ என்று மகனை உள்ளே அனுப்பிவிட்டு, மனைவியுடன் வாயிலில் நின்றார். ரூமுக்குள் நடந்த கொடுமையை, கூட்டாளி ஒருவன் படம்பிடித்தான்.

`‘இனி நீ எவனை வேணும்னாலும் கட்டிக்கோ... இந்த வீடியோவை அடுத்த நிமிஷமே நெட்ல போடுவோம்! குடும்பமே தூக்குலதான் தொங்கணும்!’ என்று மிரட்டி, சரண்யாவை விரட்டியடித்தனர்.

`திக் திக்’ என்று இதயத்துடிப்பை பலமடங்கு எகிறவைக்கும் இத்தகைய ராஜ்பகதூர்களும், ராஜாராம்களும் பற்பல பெயர்களோடும் முகங்களோடும் நம்மை சுற்றியே இருப்பார்கள் என்பதே உண்மை! இதையெல்லாம் உணராமல், விளையாட்டுத்தனமாக வேற்று நபர்களோடு செல்போனில் பேசுவதும், ஜோக்குகளைப் பரிமாறிக்கொள்வதும், படங்கள் எடுத்துக்கொள்வதுமாக இருக்கிறார்கள் நம் குழந்தைகள் என்பதை நினைக்கும்போது பதற்றமாகத்தான் இருக்கிறது. அதற்காக, ‘இனி செல்போனையே தொடக்கூடாது’ என்று பறித்தால்... அது, பெற்றோர் - குழந்தை இடையேயான நட்பைக் குலைத்துவிடும் அபாயமும் இருக்கிறது.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மனம் விட்டுப் பேசி, உஷார் படுத்திக்கொண்டே இருப்பதும், பட்டும்படாமல் அவர்களின் மீது பார்வையைப் பதித்துக்கொண்டிருப்பதும்தான் பலன் தரும் இல்லையா தோழியரே!

உரிமையுடன்,

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism