Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!

நெய்வேலி போன்ற மின் உற்பத்தி நகரங்களுக்குச் சென்றால்... ‘நீங்கள் சேமிக்கும் ஒரு யூனிட் மின்சாரம்... உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு சமம்’ என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்திருப்பார்கள்.

இப்படி மின்சாரத்துக்கு சொல்லப்படுவது வருமானத்துக்கும் பொருந்தும்தானே! அதாவது, `செலவு செய்யாமல் சேமித்து வைக்கும் ஆயிரம் ரூபாய் என்பது, புதிதாக சம்பாதிக்கும் ஆயிரம் ரூபாய்க்கு சமமானது’ என்று சொல்லலாம்தானே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை தன்னளவில் செயல்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, சமீபத்தில் சந்தித்தேன். நண்பருக்குத் தெரிந்தவர்கள் வீடு அது. நண்பருடன் எதேச்சையாக அங்கே சென்றபோது, அந்த வீட்டில் கண்ட காட்சிகள் ஆச்சர்யப்படுத்தின!

பழைய காட்டன் திரைச்சீலைகள், வீட்டின் மிதியடிகளாக மாறிக்கிடந்தன; பெயின்ட் வாங்கிய பக்கெட்டுகள், வண்ணம் தீட்டப்பட்டு பூந்தொட்டிகளாக மலர்ந்திருந்தன; சமையலுக்குப் பயன்படுத்திய கொட்டாங்கச்சிகள், தலையாட்டி பொம்மை உள்பட பலவித கலைப்பொக்கிஷங்களாக வடிவெடுத்திருந்தன. இப்படி, `யூஸ் அண்ட் த்ரோ’ என பலரும் நினைக்கும் அத்தனை பொருட்களும்... கலைப்பொருட்கள் மற்றும் பயன்பாட்டு பொருட்களாக கண்சிமிட்டின அங்கே!

வீடு முழுக்க பார்ப்பதற்கு கலைநயமாக இருந்தது. அங்கிருந்த கலைப்பொருட்கள் அத்தனையும், அவ்வளவு விலை உயர்ந்தவை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அந்த வீட்டுப் பெண்மணியின் கற்பனையில் உருவான அந்தக் கலைப்பொருட்களுக்கு இதுதான் விலையென்றும் நிர்ணயித்துவிட முடியாது என்றே தோன்றியது.

என்னுடைய ஆச்சர்ய பார்வையை உணர்ந்துகொண்டவராக பேசிய அந்தப் பெண்மணி, ``குறைவில்லாத வருமானம் இருந்தாலும், தேவையில்லாமல் புதிய பொருட்களை வாங்கிக் குவிப்பது அநாவசியமானது என நினைப்பவள் நான். கூடுமானவரை தேவையற்ற விஷயங்களுக்குச் செலவு செய்யாமல் இருப்பதுகூட சேமிப்புதான். அதனால்தான், எதையும் வீணடிக்காமல், `இனி வீண்’ என்று ஒதுக்கப்படும், தூக்கி வீசப்படும் அனைத்துப் பொருட்களையும் இப்படி மாற்றி வைத்திருக்கிறேன்’’ என்று பெருமையோடு சொன்னார் அந்த சேமிப்புச் சித்திரம்!

வீட்டில் சாப்பாடு தயாராக இருக்கும்போது... `ப்ளஸன்ட் சர்ப்ரைஸ் கொடுக்கிறேன்’ பேர்வழி என்று இரவு வீடு திரும்பும்போது பிரியாணி பொட்டலம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போகிறவர்கள்... `நான் பணம் கட்டி வாங்கும் மெட்ரோ வாட்டர்’ என்றபடி குழாயைத் திறந்துவிட்டு வீதிகளில் வழிந்தோட செய்துகொண்டிருப் பவர்கள்... என்றிருக்கும் பலருக்கும் நடுவில், அந்த `சேமிப்புச் சித்திரம்' ஒரு நல்ல வழிகாட்டிதானே..!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism