Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!

ப்போதும் இல்லாத அளவுக்கு, மதுக்கடைகளுக்கு எதிரான கோஷங்கள் வீதியெங்கும் ஒலிக்கின்றன.

ஏழை, பணக்காரன்; சின்ன வயது, பெரிய வயது; நகர்ப்புறவாசி, கிராமப்புறவாசி என்ற பாகுபாடுகள் ஏதும் இல்லாமல்... ஆக்டோபஸ் மாதிரி இறுக்கிப் பிடித்து உயிரை உறிஞ்சி எடுக்கிறது மது. இதனிடம் சிக்கிக்கொண்டு பெரும்பான்மையான தமிழக மக்கள் தவிக்கிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`பாழாய்ப்போன இந்தப் பழக்கத்துல இருந்து என் பிள்ளைங்க மீண்டு உயிர் பிழைக்கணுமே’ என்று மறுகும் அம்மாக்கள்; ‘அப்பா குடிச்சுட்டுவந்து எல்லோரையும் போட்டு அடிக்கக் கூடாது சாமி’ என்று வேண்டும் குழந்தைகள்; ‘வீட்டுச் செலவுக்குக்கூட காசு கொடுக்காம சம்பாதிக்கிற எல்லா காசையும் பாட்டில் வாங்கியே அழிஞ்சி போறானே!” என்று கதறும் மனைவிகள்; ‘இடுப்பு வேட்டி அவிழ்வதுக்கூடத் தெரியாமல் போதையில் தன் சகோதரன் வீதியில் புரண்டு மானத்தை வாங்கக் கூடாதே’ என்று தவிக்கும் தங்கைகள்... இப்படி வீதிக்கு வீதி மதுவின் கொடுமையால் எத்தனையோ பெண்கள் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு எதிராக நிகழும் பல குற்றங்களுக்குப் பிரதான காரணமாக இருப்பதும் இந்த மதுதான் என்பது ஊரறிந்த உண்மை. டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பஸ்ஸில் சிதைக்கப்பட்ட கொடுமை... பள்ளிக்குச் சென்ற தூத்துக்குடி சிறுமி சிதைத்துக் கொல்லப்பட்ட கொடூரம்... என்று பற்பல கொடுமைகளிலும் மதுவுக்கும் பெரும்பங்கு இருக்கிறது!

மதுவால் நிகழும் சாலை விபத்துகளிலும் தமிழகம்தான் தலையாய இடத்தில் இருக்கிறது!

இப்படி உடல் நலம், குடும்ப மானம், மாதச் சம்பளம், நிம்மதி... எல்லாவற்றுக்கும் மேலாக உயிர் வரை அனைத்தையும் பறிக்கும் இந்த மதுவுக்கு எதிரான போரில், சசிபெருமாள் என்கிற காந்தியவாதி உயிரைக் கொடுத்திருப்பதும்... அவருடைய உடலைக்கூட வாங்க மறுத்து வீதிக்கு வந்து போராடிய அவருடைய மனைவி உள்ளிட்டோரின் உள்ள உறுதியும்... தமிழக அளவில் மதுவுக்கு எதிரான போருக்கு வேகம் கூட்டியிருக்கிறது.

`மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்’ என்றான் பாரதி. இப்போது, `மாதரை இழிவு செய்யும் மதுவைக் கொளுத்துவோம்’ என்று நாமும் குரல் கொடுப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism