Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!

`வன்முறை என்பது இருபுறமும் கூர்தீட்டப்பட்ட ஆயுதம்’ என்பார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்த வார்த்தை பொருந்தத்தான் செய்கிறது... நாட்டில் அவ்வப்போது நடக்கும் சில தகாத சம்பவங்களைப் பார்க்கும்போது! ஸ்மார்ட்ஃபோன் தயவில்... `வாட்ஸ்அப்’, சமூக வலைதளங்கள் என அனைத்தும் சாமன்யர்களின் கைகளில் சரளமாகிவிட்ட சூழலில், இதையெல்லாம் பார்த்துத் தவிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இதற்கு நடுவே, பள்ளிக்கூடங்களில் தகவல்தொடர்புக்கான புதிய, எளிய பாதையை இதே ஆயுதம் திறந்துவிட்டிருப்பது மகிழ வைக்கிறது!

அந்தப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கு இடையில் தகவல் பரிமாற்றம் தங்குதடையின்றி நடக்க முழுமையாக கைகொடுத்துக்கொண்டிருக்கிறது `வாட்ஸ்அப் குரூப்’. அன்றைய தினம் வகுப்பறையில் என்ன பாடம் நடைபெற்றது, அடுத்த நாள் மாணவர்களுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது துவங்கி... ஸ்போர்ட்ஸ் டே, எந்தப் போட்டிக்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறார்கள் என்று சகலமும் அங்கு சங்கமமாகிவிடுகிறது. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு வாட்ஸ்அப் குரூப் இருப்பதால்... தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு மாணவர், ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும், அன்றைக்கு வகுப்பில் நடந்தவை பற்றிய அப்டேட் அலைச்சலின்றி கைகூடிவிடுகிறது அந்த மாணவனுக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இதனால், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்ல... ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே நல்ல பிணைப்பு ஏற்பட்டிருப்பதுடன், பிள்ளைகள் குறித்தும் முழுமையாக அறிந்துகொள்ள கதவுகள் திறந்திருக்கின்றன. முன்பெல்லாம், `நான்கு மாதத்துக்கு ஒருமுறை அரை மணி நேரம் பேரன்ட்ஸ் மீட்டிங் வைத்து என்ன பயன்?’ என்று அங்கலாய்த்துக்கொண்டவர்களுக்கு எல்லாம்கூட, இந்த வாட்ஸ்அப் குரூப்பில் சேர்ந்த பிறகு பரமதிருப்தி’’ என்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.

இதைப் பற்றி நம் நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது... பல ஊர்களில் பள்ளி, கல்லூரிகளில்கூட இந்த வாட்ஸ்அப் குரூப் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது என்பதையறிந்தபோது, ஆச்சர்யம் கூடத்தான் செய்கிறது!

அதேசமயம், வாட்ஸ்அப் என்பதும் இருபுறம் கூர்தீட்டப்பட்ட ஆயுதம் என்பதை மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்துவதும் அவசியம் என்றே தோன்றுகிறது! குழந்தைகளும் சரி, நாமும் சரி... வாட்ஸ்அப் எனும் அந்த நவீன தூதுவனுக்கு அடிமைகளாகிவிடாமல், பேனா, பென்சில், கணினி போல அதையும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தக் கற்றுக்கொள்ளும்போது, தாராளமாக சொல்லலாம்... `வாவ் வாட்ஸ்அப்!’

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism