பேசக்கூடாத பல விஷயங்களைக் குழந்தைகள் முன்பாக பேசும் பழக்கம் சில குடும்பங்களில் இருக்கிறது என்றால்... பேசவேண்டிய விஷயத்தைப் பேசாமல் இருக்கும் பழக்கம் பல வீடுகளில் இருக்கிறது! பேசவேகூடாத விஷயங்கள் என்ற பட்டியலில் முதலில் இருப்பது ‘பீரியட்ஸ்’ எனும் மாதவிடாய். காலங்கள் மாறிவிட்டாலும்... இதைப் பற்றிப் பேசக்கூடாது எனும் பழக்கம் மட்டும் அட்டையைப் போல பல குடும்பங்களில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், அன்றைய தினம் ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தபோது நான் பார்த்த, கேட்ட விஷயங்கள் விதிவிலக்காக இருந்தன.

`‘அம்மா, இன்னிக்கு உனக்கு உடம்பு முடியலையா... நான் கடைக்குப் போயிட்டு வரேன்...’’

``இன்னிக்காச்சும் நான் வீட்டை கிளீன் பண்றேனே மம்மி...’’ என போட்டிப் போட்டுக்கொண்டிருந்தார்கள் இரண்டு மகன்களும்!

``அட, பரவாயில்லையே... பையன்ங்க ரெண்டு பேரும் அம்மாவுக்கு இப்படி மாத்தி மாத்தி வேலைப் பாக்குறாங்களே. உடம்புக்கு என்ன ஆச்சு?’’ என விசாரித்தால், ``அதெல்லாம் ஒண்ணுமில்லை... ‘பீரியட்ஸ்’ அவ்ளோதான். ஒருத்தனுக்கு 13 வயசு இன்னொருத்தனுக்கு 14 வயசாகுது. இவங்க இன்னும் சின்ன வயசா இருக்கும்போதே, `அம்மாவுக்கு மாசம் மாசம் ஐந்து நாட்கள் வயிற்றுவலி இருக்கும். அதனால ரெண்டு பேரும் அம்மாவை தொல்லை பண்ணாம சமத்தா இருப்பீங்களாம்’னு இலைமறைகாயா பீரியட்ஸ் பத்தி சொல்லிக் கொடுத்தேன். அவங்க என்னைப் புரிஞ்சுகிட்டு இப்படி நடந்துக்கறதுக்கு அதுதான் காரணம். கணவர், மாமனார்னு வீட்டில் இருக்குற எல்லா ஆண்களுமே இப்படித்தான். எங்க வீட்டுல ஆண், பெண் யாரா இருந்தாலும் வேலைகளை பாரபட்சம் இல்லாம பிரிச்சு செய்வோம். மாதவிடாய் நாட்கள்ல மட்டும் பெண்களுக்கு ஸ்பெஷல் சலுகை.

நான் சின்னப் பெண்ணா இருந்தப்ப, ‘வீட்டுக்குத் தூரம்’னு சொல்லி தனியா உட்கார வெச்சது போல, கல்யாணத்துக்குப் பிறகு தனிச்சி இருக்க தோணல. `குடும்பத்துல உள்ளவங்களுக்கு ஏன் புரியவைக்க கூடாது’னு தோணுச்சு. இப்ப வீட்ல திடீர்னு நாப்கின் தீர்ந்து போனாகூட பையன்களே கடைக்குப் போய் வாங்கிட்டு வந்து கொடுக்கற அளவுக்கு மாறியிருக்கு என் குடும்பம்’’ என்று யதார்த்தமாகச் சொன்னார் அந்தத் தாய்.

காலமாற்றத்துக்கு ஏற்ப மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுவது பெருமளவுக்கு குறைந்திருக்கிறது. ஆனால், எத்தனை பேரின் வீட்டில் இதைப் புரியவைத்து, அந்தத் தனிமைக்கான ஓய்வை தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கொஞ்சமாவது பெற்றுக்கொள்கிறார்கள்..?

உரிமையுடன்,

ஆசிரியர்