எண்கள் மட்டும் போதுமா?

அண்மையில் நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, ''பாலிசி விஷயங்களில் முடக்குவாத நிலைக்கு அரசு ஆளாகிவிட்டதாக பரவலான கருத்து இருக்கிறது... கைவசம் பல திட்டங்கள் காத்திருந்தாலும் அவற்றை வேகமாகச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கை இல்லை. அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால்தான் அதை நிறைவேற்ற முடியும்'' என்று சொல்லி கைவசம் வைத்திருக்கும் திட்டங்களைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பென்ஷன் பாலிசி திட்டங்கள், சரக்கு மற்றும் சேவைக் கட்டணங்கள், தொலைதொடர்பு மற்றும் இன்ஷூரன்ஸ் குறித்த கொள்கை முடிவுகள், நேரடி வரி குறியீடு என பல திட்டங்கள் இன்னும் நிறைவேறாமல் காத்திருப்பது என்னவோ உண்மைதான்! ஆனால், அரசால் இத்திட்டங்களை நிறைவேற்ற இயலாமல் இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் மட்டும்தான் காரணமா?
##~## |
கடந்த கால செயல்பாட்டை வைத்துப் பார்த்தால் காங்கிரஸுக்குத் தேவை, நல்ல எண்ணிக்கை அல்ல... நல்ல எண்ணங்கள் என்றே தோன்றுகிறது!
-ஆசிரியர்

