லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

சாமான்யர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரையுமே புரட்டிப் போட்டிருக்கிறது 500

நமக்குள்ளே...

ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் அறிவிப்பு. இந்த நடவடிக்கை, பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது... சிலபல சிரமங்களையும் தந்துகொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், பணம் தொடர்புடைய, சட்டத்துக்குப் புறம்பான செயல்களும் வெளிச்சத்துக்கு வரும் என்பது வரவேற்கத்தக்க விஷயமே!

இங்கே இன்னொரு செய்தியும் இருக்கிறது. அதாவது, பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் வெளிவரும் என்ற பொதுவான கருத்து ஒலிக்கின்ற அதேவேளையில், அஞ்சறைப் பெட்டியில் பெண்கள் சேமிப்பாக வைத்திருக்கும் சிறுவாட்டுப் பணமும் வெளியே வந்துகொண்டிருப்பதை சமூக ஊடகங்களில் பலர் கேளிக்கையாக கிண்டல் செய்வதைத்தான் சொல்கிறேன்.

பிள்ளைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு, அவசர மருத்துவத் தேவைக்கு, தெரிந்தவர்களுக்கு கடன் கொடுத்து உதவுவதற்கு... இப்படி திடீர் தேவைகள் மற்றும் திட்டமிடப்பட்ட தேவைகளுக்கெல்லாம் பெண்களின் `சிறுவாடு' சேமிப்பே காலம்காலமாக பயன்பட்டு வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வீட்டு ஆண்களுக்குத் தெரியாமல் இப்படி சேமிக்கும் பணத்தை யாரும் வீண் செலவு செய்துவிடுவதில்லை. இது ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தின் மீது கொண்ட அக்கறையால் சேமிக்கும் பணம். இந்தப் பணத்தை இப்போது வெளியே கொண்டு வருவதால் எந்த வகையிலும் வெட்கப்பட அவசியமே இல்லை.

இதேபோல பல வீடுகளில் குழந்தைகளும் உண்டியலில் சேமித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவசரம் கருதி நீங்கள் இந்தச் சூழலில் உண்டியலை உடைக்க நேரிடலாம். இது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும். எனவே, இப்படியான அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் காரணத்தை அவர்களுக்குப் புரியவைப்பதோடு, இதுபோன்ற கட்டாய சூழல்களில் வாழ்வதற்கும் அவர்களைப் பழக்குவதும் அவசியம்.

அது சிறுவாட்டுப் பணமோ... சிறுகுழந்தைகள் சேமிக்கும் உண்டியல் பணமோ... அத்தனையும் நம் சேமிப்புப் பணம். இதைத் தகுந்த ஆதாரங்களுடன் மாற்றிக்கொள்ள எல்லா வகையிலும் சட்டத்தில் இடம் இருக்கும்போது, நம் சிறுவாடு சேமிப்புக் குறித்து எந்த வகையிலும் பயப்படத் தேவையில்லை.

இல்லத்தரசிகளே, உங்கள் பணம்... உங்கள் உரிமை! சிறப்பான வாழ்க்கைக்கு தொடர்ந்து சிறுவாடு சேமியுங்கள்... வாழ்த்துகள்!

நமக்குள்ளே...