Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

லகமே புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருந்த அந்த நள்ளிரவின் முதல் நொடியில், புத்தாண்டு விடிந்ததாக எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்த அதேவேளையில்... பெங்களூரு நகரின் முக்கிய சாலையில் நடந்த கொடூரங்கள், அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளன. வீதியில் நடந்து சென்ற பெண்களை மடக்கி, ஆடவர் பலர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவங்கள், இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளன. ஓரிடத்தில் சாலையில் கடந்து சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கும் இரண்டு ஆண்கள், அந்தப் பெண்ணைக் கட்டித்தழுவி முத்தம் கொடுத்து, சாலையில் வீசியடித்துவிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிப்பதிவுகள் உலகெங்கிலும் பரவி, மக்களைக் கொந்தளிக்கச் செய்திருக்கின்றன.

நமக்குள்ளே!

இங்கே சென்னையிலும் பண மதிப்பு இழப்பு தொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்களை போலீஸார் கொடூரமான முறையில் தாக்கியதோடு, அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு அவமானப்படுத்தியதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள்... மேலும் பதைபதைக்க வைக்கின்றன. இவையெல்லாம் நாகரிகமான சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நம் அனைவருக்குமே மிகப்பெரிய தலைகுனிவு.

பெங்களூரில் நடைபெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீஸிடம் புகார் கொடுக்கக்கூட துணியவில்லை. ஆனால், சென்னையில் பாதிக்கப்பட்ட பெண்களோ... பொதுப்பிரச்னைக்காக வீரத்துடன் வீதியில் இறங்கிப் போராடியவர்கள். ஆக, பயந்து ஒதுங்கும் பெண்களாக இருந்தாலும் சரி, துணிந்து போராடும் பெண்களாக இருந்தாலும் சரி... பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெங்களூரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டவர்கள் காமுகர்கள் என்றால், சென்னையில் கொடிபிடித்து கோஷங்கள் எழுப்பிய பெண்களிடம் வக்கிரத்தை காட்டியவர்கள் கயவர்கள்! சமுதாயத்தில் இப்படிப்பட்டவர்கள் காலம்காலமாக கலந்தேதான் இருக்கின்றனர். இதையெல்லாம் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்வதில்தான் இருக்கிறது பெண்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும். அதே நேரம், இந்தக் காமுகர்கள் மற்றும் கயவர்களின் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகள், நம்மை மேலும் மேலும் தைரியமானவர்களாக மாற்ற வேண்டுமே ஒழிய, கோழைகளாக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று உறுதியேற்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism