Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

`எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள் இவர்கள்... இவர்களையெல்லாம் இணைத்தது யார்... இந்தக் கட்டுக்கோப்பை இவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது யார்?’ - இப்படிப்பட்ட கேள்விகள்தாம், பொங்கல் நாளில் தமிழகத்தில் ஆரம்பித்து, இன்றைக்கு உலகம் முழுக்கவே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பார்க்கப் பார்க்க பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது!

நமக்குள்ளே!

‘ஜல்லிக்கட்டு தேவை. பீட்டா (PETA) அமைப்பைத் தடைசெய்’ என சென்னையில் உரக்கப் பேசுகிறாள் சிறுமி ஒருத்தி.

‘இது எங்கள் வீரம். இது எங்கள் சக்தி. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியில்லை என்றால், யாரும் ஓட்டு கேட்க ஊருக்குள்ள வராதீங்க’ என அதிரடியாக ஊடகங்களின் முன்பாக நியாயங்களை அடுக்குகிறார் அலங்காநல்லூரின் வயதான ஒரு பெண்மணி!

‘ஜல்லிக்கட்டு வேண்டும்’ என எழுதிய வாசகங்களுடன் லண்டனில் இருக்கும் இந்தியத் தூதரகம் முன்பாக கோஷங்களை முழக்குகிறார்கள் அங்குள்ள தமிழ்ப் பெண்கள்.

6 வயது சிறுமியில் ஆரம்பித்து 60 வயதுப் பெண்மணி வரை களத்தில் இறங்கி இருக்கிறார் கள். உணவு குறித்தோ, உறங்க வேண்டிய உறைவிடம் குறித்தோ எந்தப் பதற்றமும் இல்லாமல் நடுங்கும் பனியிலும் `தமிழ்க் கலாசாரம்’ என்கிற ஒரே புள்ளியில் இணைந்திருக்கிறார்கள்.

இப்பொறி எங்கோ, யாரோ ஒரு தனிமனிதனால் பற்ற வைக்கப்பட்டதல்ல. அது, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் நியாயத்தின் எழுச்சி என்பதைக் கண்கூடாக உணர முடிகிறது. ‘ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்பதற்காக தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இன்று பொங்கும் இதே எழுச்சிதான், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை, கடலூர் என்று மழை வெள்ளத்தின்போதும், இன்னும் சில இயற்கை பேரிடர்களின்போதும் சமூக வலைதளங்கள் மூலமாக பொங்கி வழிந்து, கைகோத்தது!

தங்களின் கருத்துரிமையை முகநூல், வாட்ஸ்அப் என்று பகிர்வதோடு நிற்காமல், நேரடியாக களம்கண்டு போர்க்குரல் கொடுக்கும் இளைஞர்களின் இத்தகைய எழுச்சி, உண்மையிலேயே உணர்வுபூர்வமானது. நியாயமான உணர்வுகள் மூலம் ஏற்படும் வலுவான இந்த ஒற்றுமைதான், இனி எதிர்கால இந்தியாவின் முக்கிய தேவை என்பது இப்போது நன்கு உணர்த்தப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் களத்திலிறங்கி நெருப்பாகத் தகித்துக் கொண்டிருப்பது... நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கூட்டுகிறது. இப்படி பொதுப்பிரச்னைகளைப் பற்றிய புரிதலும், பொதுப்பிரச்னைக்காக போராடுகிற துணிச்சலும் இன்றுபோல என்றென்றும் நம் அனைவருக்குள்ளும் கனன்று கொண்டே இருக்கட்டும் தோழிகளே!

உரிமையுடன்,

நமக்குள்ளே!



ஆசிரியர்