Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

`‘என் பொண்ணு ஏற்கெனவே ஐ.ஐ.டி கோச்சிங் கிளாஸுக்கு அலைஞ்சிட்டு இருக்கா. மெடிக்கலுக்கு `நீட் எக்ஸாம்’னு சொன்னதிலிருந்து அதுலயும் சேர்த்துவிட்டாச்சு.’’

``தமிழ்நாட்டுல இந்த வருஷம் நீட் எக்ஸாம் இருக்காதுன்னு குழப்பினதால, கோச்சிங் கிளாஸுல எம்பொண்ணை சேர்க்காம விட்டுட்டேனே...’’

நமக்குள்ளே!

- இப்படி ஒரு தரப்பு பெற்றோர் அங்கலாய்த்துக்கொண்டிருக்க...

``தனியார் பள்ளிக்கூடங்கள்ல படிக்க வைக்கறதுக்குள்ளயே பாதி கடன்காரனாகிடறோம். இதுல கோச்சிங் கிளாஸுக்கு எங்க போறது?’’

``அந்த அளவுக்கு வசதியிருந்தா, நாங்க ஏன் கெவருமென்ட் ஸ்கூல்ல சேர்த்துவிடப் போறோம்?’’

- இதுபோன்ற பேச்சுக்களுடன் குமுறிக்கொண்டிருக்கின்றனர் இன்னொரு தரப்புப் பெற்றோர்.

ஆகமொத்தம், கல்வி விஷயத்தில் தமிழக பெற்றோர் மற்றும் மாணவர்களைக் குழம்பிக் கொண்டேதான் இருக்கின்றன மத்திய - மாநில அரசுகள். ஏற்கெனவே சமச்சீர் கல்வி விஷயத்திலும் இப்படித்தான் நடந்தது. அது ஓய்ந்து முடிவதற்குள் வந்துவிட்டது இந்த நீட்.
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு முன்பு நுழைவுத்தேர்வு முறைதான் அமலில் இருந்தது. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ-மாணவிகளே பெரும்பாலான இடங்களை அவற்றில் பெற்றுவந்தனர். அரசுப் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளால் போட்டி போட முடியவில்லை என்பதால், பொது நுழைவுத்தேர்வையே அப்போது ரத்து செய்தது தமிழக அரசு.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலோடு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவில் `நீட்’ எனும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு தற்போது கொண்டுவந்திருக்கிறது. கடந்த ஆண்டும் குழப்பமான சூழல் நிலவவே... இந்தத் தேர்வை நடத்துவதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், `அடுத்த ஆண்டு நிச்சயம் நீட் தேர்வு நடத்தவேண்டும்’ என்று அப்போதே நிபந்தனை விதிக்கப்பட்டது. இவ்வளவு நாட்களாக சும்மா இருந்துவிட்டு, ‘நீட் தேர்வு தமிழகத்துக்குத் தேவையில்லை’ என்று இப்போதுதான், அதாவது தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர். `இதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?’ என்று சட்ட நிபுணர்களும் கல்வியாளர்களும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.

பெற்றோர் மற்றும் மாணவர்கள் முன்பாக இப்போது இருக்கும் கேள்வி... `ப்ளஸ் டூ பாடத்தை மட்டும் படித்தால் போதுமா? அல்லது நீட் தேர்வுக்கும் தனியாகப் படிக்க வேண்டுமா?’ பொதுவாக அனைவரிடமும் இருக்கும் கேள்வி... `கல்வி விஷயத்தில் இப்படி தொடர்ந்து குழப்பிக்கொண்டே இருப்பதும், அடித்தட்டு மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள் மறுப்பதும் நியாயமா?!’

பதில்களுக்காகக் காத்திருப்போம்.

உரிமையுடன்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நமக்குள்ளே!



ஆசிரியர்