Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

றிவியலின் வளர்ச்சி, அசுரவேகத்தில் இருக்கிறது என்பதற்குச் சாட்சி, அனைவரின் உள்ளங்கைகளில் இருக்கும் கைபேசிகள்தான். இணையத்தின் வாயிலாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைதளங்களுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளனர். அதேநேரம், உலகம் என்னதான் அறிவியல் வளர்ச்சியால் உச்சத்தை நோக்கி வேகமெடுத்தாலும் வீடுகளில், வீதிகளில், இணையத்தில் என பெண்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் சீண்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் குறையொன்றும் இருப்பதில்லை. தனிநபர் உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் வரையறை எதுவும் இல்லாமல் வரம்புமீறிப் போய்க்கொண்டிருக்கின்றன வலைதளப் பகிர்வுகள். எந்த நேரத்தில் என்ன மாதிரியான வீடியோக்கள், புகைப்படங்கள், பின்னூட்டங்கள் வரும் என்று பயந்து பயந்து, மிகமிகக் கவனத்துடன்தான் சமூக வலைதளங்களைக் கையாள வேண்டியிருக்கிறது.

நமக்குள்ளே!



தூத்துக்குடியில் தான் வேலை பார்க்கும் அரசு நிறுவனத்தின் சார்பாக ஊழியர்களால் உருவாக்கப்பட்ட, அலுவலக சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்திருந்தார் அந்தப் பெண். அலுவலகம் சார்ந்த ஒரு பதிவை வாட்ஸ்அப் குரூப்பில் அவர் பதிவிட, அதற்கு வந்த பின்னூட்டங்களில் பலவும் ஸ்மைலிகளாகவே குவிந்தன. ஆனால், அத்தனையும் அவரை கொதிக்கவைத்ததுதான் கொடுமை. `என்னைக் கேலியும் கிண்டலும் செய்வதற்காகவே சக ஊழியர்கள் இப்படி செய்துள்ளனர்’ என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு போய்விட்டது விவகாரம். நாற்பதுக்கும் அதிகமான ஊழியர்கள் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், மேல்விசாரணைக்கு தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

வாட்ஸ்அப் பின்னூட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் அலுவலக அரசியல் குறித்து இங்கே அலசத் தேவையில்லை. அதே நேரம், ஒட்டுமொத்தமாக ஒரு பெண்ணை செல்போன் திரைக்குள் கேலி செய்வதும், அவளை பொதுவெளியில் நிறுத்தி வைத்து கேலி செய்வதும் ஒன்றுதானே என்பதை உணராமல், `சமூக வலைதளங்களில் பின்னூட்டம் இடுவதற்கு உரிமை இருக்கிறது’ என தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க முயல்வதுதான் கவலையடைய வைக்கிறது.

இந்த விஷயத்தில்தான் என்றில்லை.... இது ஒரு பொதுப்பழக்கமாகவே இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. தம் தரப்பில் நிகழ்த்தப்பட்ட செயலுக்கு நியாயம் சேர்க்கப் போராடுகிறார்களே தவிர, தங்கள் செயலால் அந்தப் பெண் எந்த அளவுக்கு வருந்தி இருப்பார், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்பதையெல்லாம் துளியும் யோசிப்பதே இல்லை.

பொதுவெளி என்பது காற்று வீசிக்கொண்டிருக்கும் நம் தெருக்கள் மட்டுமல்ல. அது நம் செல்போன் திரைக்குள்ளும் இருக்கிறது என்பதை உணர்வீர்களா தோழர்களே!

உரிமையுடன்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism