Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
நமக்குள்ளே...
##~##

வங்கியில் பணியாற்றும் தோழியின் தோழி ஒருத்தி பற்றி... உங்களிடம் பகிர வேண்டும் என்பது நீண்ட நாள் யோசனை. சமீபத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), சென்னையில் நடத்திய கூட்டத்தில் ஒலித்த குரல்கள்... பற்றிப் படித்ததும், 'இதுதான் சரியான சந்தர்ப்பம்' என்று முடிவு செய்துவிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பத்தில் டெல்லியில் பணிபுரிந்தவருக்கு... பதவி உயர்வோடு, சென்னைக்கு டிரான்ஸ்ஃபர். பள்ளி செல்லும் இரு பெண் குழந்தைகள், தொழில் நடத்தும் கணவர்... என மொத்தக் குடும்பத்தையும் வேரோடு பறித்து, நடுவது மாதிரியான கஷ்ட சூழல்... ஒருவாறாக சமாளித்தார். ஆனால், புதிய வங்கிக் கிளையிலிருக்கும் பழம்பெருச்சாளிகள், தலைமைக் காசாளராக ஒரு பெண் வந்திருப்பதை ஜீரணிக்க முடியாமல்... சிக்கல்கள், சவால்களை முளைக்க வைத்தன.

அத்தனையையும் லாகவமாக கையாண்டு, நிதானித்த வேளையில், திருச்சிக்கு டிரான்ஸ்ஃபர். 'தொழில் கெட்டுவிடும்' என கணவர் சென்னையிலேயே தங்கிவிட, மாமியார் மற்றும் குழந்தைகளோடு திருச்சியில் தங்கினார். மீண்டும் பதவி உயர்வோடு... தஞ்சாவூருக்கு டிரான்ஸ்ஃபர். குழந்தைகளின் படிப்பு கெடும் என்பதால்... தினமும் நூற்றியிருபது கிலோ மீட்டர் பயணிக்கிறார் வேலைக்காக!

இத்தோழி பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், 'ஒரு குழந்தை பிறந்துவிட்டாலே... வேலைக்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிடும் பெண்கள் நிறைய. அவர்களுக்கு நடுவில்... இதுமாதிரியான 'டப் டப்’ டிரான்ஸ்ஃபர்கள், வேலைப்பளு, சீனியர்களின் டார்ச்சர்... எல்லா வற்றையும் சமாளித்து, நிர்வாகப் பதவிகளுக்கு எத்தனை பெண்கள் உயர்ந்திருக்கிறார்கள்?' என்றே யோசனை ஓடும்.

'நிர்வாகப் பதவிகளில், பெண்களின் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை' என்பதைத்தான், 'இந்திய தொழில் கூட்டமைப்பு' கவலையோடு விவாதித்திருக்கிறது. 'தனியார் நிறுவன நிர்வாக பதவிகளில் குறைந்தபட்சம் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்' என்று குரல் கொடுத்திருக்கிறது!

'இடம் கிடைக்கவில்லை' என்பது ஒருபுறமிருக்க... கிடைத்த இடங்களை தக்க வைத்துக் கொண்டு, அந்தத் தோழி போல முன்னேறு வதற்கு நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதுதானே உண்மை.

என்ன... நான் சொல்வது சரிதானே தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...


ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism