Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

``மகன் பத்தாவது படிக்கிறான். படிப்புடன் பாட்டு, நடனம், இசை, ஓவியம் என பன்முகத் திறமைகளையும் கொண்டிருப்பவன். கூடவே மொபைல் கேம்ஸ், வீடியோக்கள், டப்ஸ்மாஷ் என லேட்டஸ்ட் டெக்னாலஜி எதையும் விட்டுவைப்பதில்லை. அவனுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபாடு காட்டுவதைப் போலவே எதையும் கூர்ந்து கவனிப்பவனாகவும் இருக்கிறான். ஒழுக்கம் பற்றி கட்டுரை எழுதச் சொல்லி, பள்ளியில் வீட்டுப்பாடம் கொடுத்திருப்பதாக என்னிடம் கேட்டான்.

நமக்குள்ளே!



பணம், பதவி என்றெல்லாம் என்னதான் வசதிகள் கிடைத்தாலும், ஒழுக்கமாக இல்லாவிட்டால் மகிழ்ச்சி கிடைக்காது. ஒழுக்கத்துடன் நேர்மையாக வாழ்வதே வாழ்க்கை. அப்போதுதான் மகிழ்ச்சியும் கிடைக்கும். இதைத்தான், ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்று நம்முடைய திருவள்ளுவரும், `அறிவினும் மேலானது ஒழுக்கம்’ என்று மேலைநாட்டு அறிஞர் எமர்சனும் கூறியிருக்கிறார்கள் என்று மகனிடம் சொன்னேன்.

என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவன், `அப்போ கோடிகோடியா ஊழல் பண்ற அரசியல்வாதிங்க, அதிகாரிங்க எல்லாம் வசதியாவும் மகிழ்ச்சியாவும்தானே இருக்காங்க. ஊழல் பண்றது ஒழுக்கமில்லாத செயல்னா, அவங்கள்லாம் எப்படி மகிழ்ச்சியா இருக்க முடியும்?’ என்றான் பட்டென!

‘நாயகன்’ படத்தில் ‘நீங்க நல்லவரா... கெட்டவரா..?’ என்ற கேள்விக்கு கமல் கொடுக்கும் ‘தெரியலையேப்பா’ என்ற பதிலைத்தான் அப்போதைக்கு வெளிப்படுத்த முடிந்தது. ஒழுக்கத்துக்கும் மகிழ்ச்சிக்குமான தொடர்பியலை குழந்தைகளுக்குப் புரியவைப்பது என்பது பெற்றோருக்கு பெருஞ்சவாலாகவே இருந்துவருகிறது.’’

- தனக்கும் தன் மகனுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் குறித்து கவலையோடு நண்பர் என்னிடம் பகிர்ந்ததும், இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல; தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று என்பதை அதிர்ச்சியுடன் உள்வாங்கினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைகள் கேட்கும் பல கேள்விகளுக்கு நம்மிடத்தில் பதில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு, அவர்களுக்கான பதில்களைத் தராமல் தட்டிக்கழிப்பதுதானே அதிகமாக நடக்கிறது. குழந்தைகள், எப்போதும் உண்மைக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். அவர்களின் கேள்விகளில் எப்போதும் நியாயம் இருக்கும். அந்த நியாயத்துக்கு நம்மிடம் சரியான பதில் இல்லாமல் போனாலும், அவர்களின் கேள்விகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்கான விடைகளைக் கண்டறிய முற்படுவதுதானே பெற்றோரின் பொறுப்பு?

குழந்தைகளைப் பேசவிட்டு உலகை உணர்வோம்... உணர்த்துவோம்!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்