Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!
நமக்குள்ளே!

பல நேரங்களில் நம்மை ஒரு நொடி நின்று நிதானமாக யோசிக்க வைத்துவிடுகின்றன சில தத்துவங்கள். அவை நாம் படிக்கும் புத்தகங்களில் இருந்து கிடைக்கலாம்; நமக்கு யாராவது சொல்லக்கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம்; நம் கைப்பேசிக்குள் வாட்ஸ்அப் தகவல்களாகக் கண்ணில்பட்டிருக்கலாம்; அவ்வளவு ஏன்...  ஆட்டோவுக்குப் பின்னால்கூட எழுதி வைக்கப்பட்டிருக்கலாம். அப்படி நாம் படித்தவை சில நேரங்களில் நம் வாழ்க்கையோடு பொருந்தி நம்மை ஆச்சர்யப்படுத்தும். அப்படி நான் ரசித்த ஒரு வாட்ஸ்அப் தகவல் இது...

நகரமயமாக்கலின் விளைவாக அப்பார்ட்மென்ட் வாழ்க்கைமுறை அதிகரித்துக்கொண்டே வருகிறது.  அப்பார்ட்மென்ட்டுக்குள் முதல்தளத்தில் சொந்தமாக  ஒரு ஃப்ளாட் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்படி நீங்கள் வாங்கும் ஃப்ளாட்டில் இருக்கும் நான்கு பக்கச் சுவர்களுடன், மேல்தளம், கீழ்த்தளங்களின் சுவர்கள் என ஆறு பக்கங்களையும் சேர்த்து ஒரு கனசதுரம் போல யோசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் யோசிக்கும் எந்தச் சுவரும் அப்பார்ட்மென்ட்டில் இருக்கும் வேறு ஒருவரோடு பகிர்ந்து கொண்டவையாகவே இருக்கும். என்னதான் நீங்கள் லட்சங்களில் செலவு செய்து ஒரு ஃப்ளாட்டை வாங்கி இருந்தாலும், கடைசியாக, கார் பார்க்கிங்கில் ஆரம்பித்து, படிக்கட்டுகள், மொட்டை மாடி, தோட்டம் என எல்லாவற்றையும் அப்பார்ட்மென்ட்டில் குடியிருக்கும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டுதான் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்போம்.

அப்பார்ட்மென்ட் வாழ்க்கை நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, இருக்கும் இடத்துக்கு ஏற்ப வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம். இது அப்பார்ட்மென்ட்டுக்கு மட்டுமல்ல... வாழ்வின் எந்த நிலையிலும் சூழலுக்கு ஏற்ப வாழப் பழகிக்கொள்ளுதலே சிறந்தது என்கிற நல்ல தகவலுடன் என்னை ஆச்சர்யத்துடன் ‘அட’ சொல்ல வைத்தது, சமீபத்தில் வந்த இந்த வாட்ஸ்அப் தத்துவம்.

உங்களில் பலரும் இதைப் படித்திருக்கலாம். இந்த வாட்ஸ்அப் தகவல் கிடைக்கப் பெறாதவர்கள் அதன் முழுமையான வடிவத்தை அவள் விகடன் ஃபேஸ்புக் தளத்தில் (www.facebook.com/avalvikatan) பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

இங்கே பலரும் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல் தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த உலகில் எதுவுமே நம் ஒருவருக்கான சொந்தம் கிடையாது என்பதைப் போகிற போக்கில் புரியவைக்கிறது இந்த வாட்ஸ்அப் தகவல். `இன்று எது நமக்குச் சொந்தமோ அதுவே நாளை வேறொருவருக்குச் சொந்தமாகி விடுகிறது’ என்கிற கீதையின் சாராம்சம் நாம் அறிந்ததுதானே!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்