Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

`நீ முதல் ரேங்க் வாங்கியே தீர வேண்டும்’ என்று சொல்லாத பெற்றோரே இல்லை எனும் அளவுக்கு ‘ரேங்க் ஃபீவர்’ என்பது பல காலமாகத் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. ஒரு பாடத்தில் பத்தாயிரம் பேர், பதினோராயிரம் பேர் நூற்றுக்கு நூறு வாங்கும் காலத்திலும், சுமார் எட்டரை லட்சம் பேர் எழுதும் பரீட்சையில் ஒரே ஒரு மாணவரை `மாநிலத்திலேயே முதல் ரேங்க்’ என்று முன்னிலைப்படுத்தி வந்தனர். `இது, ஒட்டுமொத்த மாணவர்களையும் உற்சாகப்படுத்தும் செயல்’ என்று சொல்லப்பட்டாலும், ஆயிரமாயிரம் மாணவர்களை மனஉளைச்சலில் தள்ளும் செயல் என்பதைத்தான் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பத்திரிகை மற்றும் மீடியாக்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்தி வந்தன. கூடவே, ‘எங்கள் பள்ளி மாணவர்தான் மாநிலத்திலேயே முதல் ரேங்க் எடுத்தார்’ என்று ஏதேனும் ஒரு தனியார் பள்ளி மக்களிடம் வியாபாரம் செய்யவும் இது பயன்பட்டுவந்தது.

இத்தகைய கொடுமையான மாயச்சுழல்களில் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மீட்டெடுக்கும் முயற்சியை இப்போது கையில் எடுத்திருக்கிறது தமிழகக் கல்வித்துறை. `இனி, பத்து மற்றும் ப்ளஸ் டூ வகுப்புத் தேர்வுகளுக்கு மாநில ரேங்க் கிடையாது’ என்ற அறிவிப்பு பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

நமக்குள்ளே!



அடுத்தபடியாக, `இனி ப்ளஸ் ஒன் வகுப்புக்கும் பொதுத்தேர்வு உண்டு’ என்றோர் அறிவிப்பை வெளியிட்டு, பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது தமிழகக் கல்வித்துறை.

பின்தங்கிய மாநிலங்களின் மாணவர்கள்கூட நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் JEE, JIPMER போன்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, புகழ்பெற்ற ஐஐடி, ஜிப்மர் போன்ற கல்வி நிலையங்களில் சேருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வில் 1,150 மதிப்பெண் வாங்கும் மாணவர்கள்கூட சோபிக்காமல் போய்விடுகின்றனர். பள்ளி திறந்து ஆறு மாதங்கள் வரை ப்ளஸ் ஒன் பாடத்தை நடத்தாமல், ப்ளஸ் டூ பாடத்தை நடத்த ஆரம்பித்துவிடும் பள்ளிகள் அதிகம் இருப்பதுதான் இதற்குக் காரணம். அடிப்படைகள் புரியாமல் மனப்பாடக் கல்விமுறையை மட்டுமே கடைப்பிடிக்கும்போது எப்படி சோபிக்க முடியும்?

இதற்கு முடிவு கட்டியிருப்பதோடு, மூன்று ஆண்டுகளில் படிப்படியாக அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டங்களை மாற்றியமைக்கப்போவதாகவும், ஆசிரியர்களுக்குத் தொடர் பயிற்சி அளித்து அவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த முயற்சி எடுக்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறது தமிழகக் கல்வித்துறை.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெருமை, மீண்டும் வந்து சேரட்டும்!

உரிமையுடன், 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நமக்குள்ளே!

ஆசிரியர்