Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

‘வீட்டுக்கு யார் வர்றாங்க... போறாங்கனுகூட தெரியாம, எப்பப் பார்த்தாலும் மொபைல்லேயே கேம்ஸ் ஆடிக்கிட்டிருக்கான். மொபைலைத் தொடாதேனு சொல்லலை. ஆனா, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் யார்கிட்டயும் பேசாம, சதா சர்வநேரமும் செல்போனையே நோண்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தா... பார்க்கவே எரிச்சலா இருக்கு!’

‘வாட்ஸ்அப் குரூப்புல புதுசா என்ன மெசேஜ் வந்திருக்கு. ஃபேஸ்புக்ல யார் ஸ்டேட்டஸ் போட்டிருக்காங்கனு மாத்திமாத்தி செக் பண்ணிட்டே இருக்கிறாங்க. ஆனா, பால்காரர், பேப்பர்காரர்னு வீட்டுக்கு யார் யார் வர்றாங்க, போறாங்கனுகூட அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குது.’

- நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு சந்திப்பின்போது, தங்கள் பிள்ளைகளைப் பற்றி இப்படி பலவிதமான புலம்பல்கள்.

நமக்குள்ளே!`‘இந்த செல்போன் போதையில் இருந்து குழந்தைகளை மீட்க என்னிடம் எளிமையான ஓர் உபாயம் இருக்கிறது’' என்று தோழி ஒருத்தி சொல்ல, ``அது என்ன உபாயம்?'' என்று ஆர்வம் பொங்க அத்தனை கண்களும் தோழியின் பக்கம் திரும்பின.

``முதலில் நாம் தெளிய வேண்டும். சாலையில் நடக்கும்போதும், வண்டியை ஓட்டும்போதும் உங்களில் எத்தனை பேர் செல்போனைத் தொடாமல் இருக்கிறீர்கள். கையைத் தூக்குங்கள்'’ என்று அந்தத் தோழி சொல்ல, பெரும்பாலான கைகள் உயரவில்லை.

‘`சிகரெட், மது, கஞ்சா போன்றவைதான் போதைப் பொருள்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் டி.வி, சினிமா, சாப்பாடு, செல்போன் என்று எந்த விஷயமானாலும் அளவுக்கு மீறினால் அவையும் போதைப் பொருள்களே. இதில் முதல் பட்டியலில் இருக்கும் போதைப் பொருள்களைவிட, இரண்டாவது பட்டியலில் இருக்கும் போதைப் பொருள்கள்தாம் ஆபத்து நிறைந்தவை'' என்று அழுத்தம் கொடுத்த அந்தத் தோழி,

``கூகுளில், ரயில் விபத்து தொடர்பான வார்த்தைகளைத் தேடினால்... தண்டவாளத்தைக் கடக்கும்போது தினமும் எத்தனை பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். இதிலும், செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். செல்போனின் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, பேசிக்கொண்டோ நடக்கும்போது நம் கவனம் சிதறுவதுடன், வாகனங்கள் எழுப்பும் சத்தமும் நமக்குக் கேட்பதில்லை. அதேபோல, அக்கம்பக்கத்திலிருந்து ஏதாவது ஆபத்து நம்மை நோக்கி வருகிறதா என்பதையும் கவனிக்கமுடியாமல் போய்விடும்'' என்று நிஜ சம்பவங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்.

நில்... கவனி... செல்(போன்) என்பதை முதலில் நாம் கடைப்பிடிப்போமா தோழிகளே!

உரிமையுடன்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நமக்குள்ளே!

ஆசிரியர்