அலுவலக ஓய்வுநேரங்களில்... ‘செல்லக்குட்டி... ஜூஸ் போட்டு கிச்சன்ல வச்சிருக்கேன். மறக்காம குடிச்சிடு. பாத்ரூம் குழாயைச் சரியா மூடி வைக்கணும். அம்மா வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும். பத்திரமா இரு’ என்பது தொடங்கி, விதம்விதமான காரணங்களுடன் கடிதங்களைத் தயாரிப்பது; கடிதங்களின் நான்கு மூலைகளிலும் ஸ்மைலிகளை வரைந்து வண்ணம் தீட்டுவது; நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய விநோதமான கிராஃப்ட்களை உருவாக்குவது என்று பிஸியாகவே இருப்பார் அலுவலகத் தோழிகளில் ஒருவர்.

காரணங்களைத் தோழியே சொல்கிறார் கேட்போமா...

``ஆபீஸ் போற கணவர் வீட்டுக்கு வர இரவு 8 மணி ஆகிடும். எனக்கும் அடுத்த வாரம் மாலை நேர வேலை. சாயங்காலம் 3 மணிக்குக் கிளம்பி, இரவு 11 மணிக்குதான் வீட்டுக்கு வருவேன். பொண்ணு ஸ்கூல் போயிருக்கா. மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவா. அவங்க அப்பா வர்ற வரைக்கும் கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்குத் தனியாதான் இருப்பா. அம்மா அப்பா ரெண்டு பேருமே கூட இல்லாம, வீட்டுல தனியா இருக்குற நேரங்கள்ல இந்த லெட்டர் அவளை எங்க கூடவே வெச்சிருக்கும்ல.

ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்ததும், ‘வந்துட்டேன்’னு போன் செஞ்சு எங்களுக்குத் தகவல் சொன்னாலும், பல நேரங்கள்ல போன் மூலமா மட்டுமே அவளை முழுசா எங்களால வழி நடத்த முடியல. ஆபீஸ் வேலையில மூழ்கிட்டா... கிட்டத்தட்ட அவளை மறந்தும் போயிடுவோம். அதான் முடிஞ்ச அளவுக்கு எங்களோட இருப்பு, எந்த நேரமும் அவகிட்ட இருக்கிற மாதிரி பார்த்துக்குறோம்''.

இத்துடன், தாங்கள் வீட்டில் இல்லாவிட்டாலும் மகளின் அருகில் இருப்பதுபோன்ற சூழலை உருவாக்குவதற்காக அவ்வப்போது செய்யும் பலவிதமான ஏற்பாடுகள் பற்றியும் தோழி பகிர்ந்தது ஹைலைட்!

இவையெல்லாம் ஒருபக்கம் மகிழ்ச்சியைக் கூட்டினாலும், இன்னொருபக்கம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள குடும்பத்தில் பெரியவர்கள் இல்லாத அளவுக்குத் தனிக்குடித்தனங்கள் பெருகியிருப்பதை எண்ணி வருந்தவும் வைக்கிறது. தாத்தா பாட்டி மற்றும் உறவுகள்மூலம் கிடைக்கவேண்டிய அனுபவ அறிவையும் மகிழ்ச்சியையும் தோழியின் கடிதம் அந்தக் குழந்தைக்குக் கொடுத்துவிடாது என்றாலும், பொருளாதாரத் தேவைக்காக கணவன் மனைவி என இருவருமாக ஓடக்கூடிய வாழ்க்கைச் சூழலை வேறு என்னதான் செய்துவிட முடியும்? இதிலும், அப்பா அல்லது அம்மா மட்டுமே இருக்கும் `சிங்கிள் பேரன்ட்’ என்றால், நிலைமை இன்னும் மோசம்.

இதற்கெல்லாம் காலத்தையும், கலாசார மாற்றங்களையும் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பதைவிட, தோழியைப்போல மாற்றி யோசிப்பது எளிய தீர்வு என்றே தோன்றுகிறது!

உரிமையுடன்,

ஆசிரியர்