``கருத்தடைச் சாதனமான காண்டம்களுக்கு வரிவிலக்கு... மாதவிடாய் நேரத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு வரிவிதிப்பு.’’

- சமூக வலைதளங்களிலும், பெண்கள் மத்தியிலும் சூடாக இதைப்பற்றி விவாதிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி)... நாடு முழுக்கக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அதிக அளவில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. `இது சுதந்திரத்துக்குப் பிறகு நடந்திருக்கும் மிக முக்கியமான நிகழ்வு; இந்த வரிச் சீரமைப்பால் வரி ஏய்ப்பு, லஞ்சம் எல்லாம் குறையும். பொருள்களின் விலை குறையும்’ என்று ஆதரவுக் குரல்களும்... `இதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. சொகுசு கார்களுக்கு வரியைக் குறைப்பதும், கடலை மிட்டாய்க்கும் தீப்பெட்டிக்கும் வரியைக் கூட்டுவதும்தான் வரிச் சீரமைப்பா?' என்பது போன்ற எதிர்க்குரல்களும் கேட்கின்றன. இதற்கு நடுவேதான்... நாப்கின் பற்றிய குமுறல்கள்!

`கருத்தடைச் சாதனமான காண்டம் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு முக்கியமானது மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய நாப்கின். சொல்லப்போனால் உடலுறவு என்பது விருப்பத்தேர்வுதான். ஆனால், மாதவிடாய் என்பது பெண்களின் விருப்பத்தேர்வு அல்ல... இயற்கையின் கட்டாய ஏற்பாடு. அதனால்தான் நாப்கின்களுக்கு வரிவிலக்குத் தேவை என்று நீண்டகாலமாகவே குரல் கொடுக்கப்படுகிறது’ எனச் சமூக வலைதளங்களில் விவாதிக்கிறார்கள் பலரும்.

`ஏற்கெனவே நாப்கின்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி, ஜி.எஸ்.டி-க்குப் பிறகு குறைந்துள்ளதுதானே’ என்று சிலர் சுட்டிக்காட்டலாம். ஆனால், கேள்வி இதுதான். `நோய் வந்த பிறகு அதைத் தடுப்பதற்குப் பல நூறு கோடிகளை ஒதுக்கீடு செய்வது உத்தமமா அல்லது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுத்துவது உத்தமமா?' நாப்கின்கள் என்பது பெண்களின் சுகாதாரம் சார்ந்த விஷயம் இல்லையா?

ஆயிரம்தான் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும், இந்தியாவில் 25 சதவிகிதப் பெண்கள் மட்டுமே நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வசதியோடு இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. மாதவிடாய்த் தொல்லைக்குப் பயந்து, பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிடும் ஏழை எளிய மக்கள் வாழும் நாடு நம்முடையது என்பதும் கவலையோடு கவனிக்கவேண்டிய ஒரு விஷயம்.

எனவே, பெண்களின் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றோடும் தொடர்புகொண்டது நாப்கின் என்பதை உணர்ந்து, அதன் மீதான வரியை முழுமையாக ரத்து செய்ய மோடி அரசு முன்வர வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு!

உரிமையுடன்,

ஆசிரியர்