Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

“இதெல்லாம் சரியில்லம்மா... உங்க அண்ணன் கல்யாணத்துக்கு 10 பவுன் மொய் செஞ்சோம். ஆனா, அவரு நம்ம பொண்ணு வயசுக்கு வந்தப்ப வெறும் 3 பவுன்தான் சீர் செஞ்சிருக்கார்... இதையெல்லாம் நீ கேட்கவே மாட்டியா?”  

நமக்குள்ளே!“அங்க மட்டும் என்ன வாழுதாம்... உங்க தங்கச்சிப் பொண்ணு பிறந்த நாளுக்கு காஸ்ட்லி ஐபோன் வாங்கிக் கொடுத்தீங்க. நம்ம பையன் பிறந்த நாளுக்கு அவ என்ன வாங்கிக் கொடுத்தாளாம்... வெறும் 500 ரூபாய்க்கு ஒரு சட்டை.”

ரயில் பயணமொன்றில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மெள்ள ஆரம்பித்த பேச்சு, கொஞ்சம் வாக்குவாதமாகவே மாறி, அக்கம்பக்கத்தினரின் பார்வைகளை அவர்களின்மீது பதிக்க வைத்தது. கடைசிவரை விட்டுக்கொடுக்காமலே இருவரும் பேசிக்கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் இருந்தனர். ஒருகட்டத்தில் நாம செய்ததையெல்லாம் திருப்பி வாங்கிவிட வேண்டும் என்கிற அளவுக்கு அவர்களின் பேச்சு தடிக்கவும் செய்தது. இத்தனைக்கும் அவர்கள் வசதி குறைவானவர்களாகவும் தெரியவில்லை.

ரயிலிலிருந்து இறங்கும்போதுதான் அந்தச் சலசலப்பு ஓய்ந்தது. நீண்ட சத்தத்துக்குப்பின் கிடைத்த நிசப்தம், நிறையவே யோசிக்க வைத்தது. `உறவு என்பது அன்பில் துளிர்ப்பதா? இல்லை, பணத்தால் மதிப்பிடப்படுவதா?' என்கிற கேள்விகள் உள்ளுக்குள் தொடர ஆரம்பித்துவிட்டன.

காது குத்து, கல்யாணம் என நல்ல நிகழ்வுகளின்போதும் பரிசுப் பொருள்கள், நகை, பணம் என்றெல்லாம் கொடுப்பது காலங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. ஏன் துக்க நிகழ்வுகளில்கூட பணம், துணிமணி கொடுப்பதைச் சம்பிரதாயமாகவே வைத்துள்ளனர். இவையெல்லாம் ஒருவர்மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காகவும், உறவை மேலும் பலப்படுத்துவதற்காகவும் ஆரம்பித்த பழக்கங்களாகத்தான் இருக்க முடியுமே தவிர, `நாம இப்ப செஞ்சா... பின்னாடி அவங்க நமக்குத் திருப்பி செய்யணும்' என்கிற எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாகியிருக்காது என்பதுதான் உண்மையாக இருக்கும்.

அப்படி இருக்கும்போது அழகாகப் பூத்து, தினம்தோறும் வாசம் வீசவேண்டிய இந்த வாழ்க்கையைப் பணம், ஈகோ, கோபம், சந்தேகம் என பல்வேறான காரணங்களால் மொட்டிலேயே கிள்ளி எறிவது சரிதானா?

கணவன் மனைவி, மாமியார் மாமனார், மருமகள் மருமகன், காதலன் காதலி, தோழன் தோழி இப்படிக் குடும்ப உறவுகள், நட்பு, காதல் என எதுவாக இருந்தாலும் அதில் அன்பை விதைக்காத வரையில் அங்கு எதுவும் நீடிப்பதில்லை. எந்த உறவில்தான் விரிசல்களோ, பிரச்னைகளோ இல்லாமலிருக்கின்றன?

ஈகோவைக் கொஞ்சம் தூர வைத்துவிட்டு, அன்பால் உலகை ஆளலாம்தானே!

உரிமையுடன்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நமக்குள்ளே!

ஆசிரியர்