Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

பெரும்பாலான இந்தியக் குடும்பங்களின், குடும்ப உறுப்பினர்கள் பட்டியலில் ரேஷன் கார்டுகளுக்கு

நமக்குள்ளே!

முதலிடமே உண்டு. ஆம், கணிசமான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைப் பட்டினியில்லாமல் வாழ வைத்துக்கொண்டிருப்பதே இந்த கார்டுகள்தான். கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களில் பலருக்கும் ஆபத்பாந்தவன் இந்த கார்டுகளே!

இத்தகைய சூழலில், ரேஷன் பொருள்கள் விநியோகத்தை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. எரியும் தீயில் எண்ணெயை ஊற்றிய கதையாக காஸ் சிலிண்டர் மானியமும் விரைவில் ரத்து என்கிற அதிரடி அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

ரேஷன் சலுகைகளை வசதியானவர்களும் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்கிறார்கள். இதில் உண்மையில்லாமல் இல்லை. அதற்காக அனைவரையுமே பணக்காரப் பட்டியலில் சேர்ப்பது சரியா?

``என் வீட்டுக்காரர் பொசுக்குனு போய்ச் சேர்ந்துட்டாரு. பெத்துப் போட்ட ரெண்டு புள்ளைகளையும் தனியொருத்தியாதான் காப்பாத்திக்கிட்டிருக்கேன். நாளெல்லாம் கஷ்டப்பட்டு தோல் கம்பெனியில நின்னுகிட்டே வேலை பார்க்கிறேன். கஷ்டப்பட்டு உழைச்சுதான் மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கிறேன். வாயைக் கட்டி வயித்தைக் கட்டி நாலு காசு சேர்த்து வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கி வெச்சிருக்கேன். ரேஷன் அரிசி சாப்பிடுறவங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கக் கூடாதுனு சொல்றதெல்லாம் தப்பில்லையா. நாங்களும் மனுஷங்கதானே. யாரையும் ஏமாத்திப் பொருள் சேர்க்கலையே?’’

- இது தனி ஒருத்தியின் குரலல்ல... சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு திறமையாகக் குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்களின் உள்ளக் குமுறல்.

ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் பல குடும்பங்களின் அடுப்பில் ரேஷன் அரிசியும் ரேஷன் பருப்பும்தான் வெந்துகொண்டிருக்கின்றன. இப்படிக் கிடைக்கும் மானிய விலை உணவுப் பொருள்கள், மானிய விலை எரிவாயு போன்றவைமூலம் மிச்சப்படுத்தப்படும் பணம்தான் பல குடும்பங்களை டி.வி, ஃப்ரிட்ஜ், கான்கிரீட் வீடு என்று குறைந்தபட்ச வசதிகளோடு வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. கல்வி, திருமணம், மருத்துவம் என்று எதிர்காலத் தேவைகளுக்காக அவர்களின் சேமிப்பையும் உறுதிப்படுத்துகிறது என்பதுதான் உண்மை!

ரேஷன் மற்றும் சமையல் எரிவாயு மானியங்களைப் பறிப்பதன்மூலம், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இன்றைய தேவை மட்டுமல்ல; எதிர்காலச் சேமிப்பும் தட்டிப் பறிக்கப்படுகிறது என்பதை யார் உணர்த்துவது இந்த அரசர்களுக்கு?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உரிமையுடன்,

நமக்குள்ளே!


 

ஆசிரியர்