Published:Updated:

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

நம் வளர்ச்சி... தேசத்தின் வளர்ச்சி!

அன்பு வாசகர்களே

று ஆண்டுகளை நிறைவு செய்து ஏழாம் ஆண்டில் வாசகர்களின் பேராதரவோடு அடியெடுத்து வைக்கிறது உங்கள் 'நாணயம் விகடன்'. இந்த ஆறு ஆண்டுகளில்... தனிநபர் நிதி நிர்வாகம், சேமிப்பு, தொழில் வளம், பொருளாதார மேம்பாடு என பணம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரிவுகளிலும் உரிய நிபுணர்களின் துணையோடு வழிகாட்டுதல் தந்து... அக்கறைமிக்க நண்பனாக அத்தனை வாசகர்களையும் 'நாணயம்' வழி நடத்தி வந்திருக்கிறது.தொலைகாட்சி உள்ளிட்ட ஏராளமான பல பொழுதுபோக்குகள் தனி மனிதனின் நேரத்தை அபகரித்துக் கொண்டாலும்... சுயமுன்னேற்றம் தொடர்பான ஆலோசனைகளை தேடிப் பிடித்துப் படிப்பதில் தமிழ் வாசகர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான நல்லதொரு சான்று 'நாணயம்' கண்டிருக்கும் வளர்ச்சி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
உலகப் பொருளாதாரத்தின் இன்றைய போக்கை மனதில் நிறுத்திப் பார்க்கையில், இதுவரை கடந்து வந்த பாதையை விடவும், இனிமேல்தான் மிகக் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரிகிறது. செலவினமாக இருந்தாலும், சேமிப்பாக இருந்தாலும், முதலீடாக இருந்தாலும்... மிகுந்த தொலைநோக்கும் வலுவான பொருளாதாரக் கண்ணோட்டமும் கொண்டவர்களே எதிர்காலத்தை எதிர்கொண்டு வளம் காண முடியும் என்ற சூழல் இப்போது!

இந்தச் சூழலின் முக்கியத்துவத்தை உங்கள் 'நாணயம் விகடன்' நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது. இன்னும் என்னவெல்லாம் உங்களுக்குத் தரவேண்டும் என்பதற்கான மிக விரிவான திட்டமிடலை எங்கள் குழு மேற்கொண்டு வருகிறது. அதற்கான ஆரம்ப விறுவிறுப்பை நீங்கள் இந்த சிறப்பிதழிலேயே நன்றாக உணர முடியும். உங்களின் வளர்ச்சியே எங்களின் வளர்ச்சி... நமது வளர்ச்சியில்  எதிரொலிப்பது - இந்த தேசத்தின் வளர்ச்சி! இதழுக்கு இதழ் பெருகி வரும் உங்கள் ஆதரவு, எங்கள் பொறுப்பை பன்மடங்கு ஆக்குகிறது. அதை நன்றாகவே உணர்ந்து, தன் கடமையை செவ்வனே செய்யும் உங்கள் 'நாணயம் விகடன்'!

-ஆசிரியர்.

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே