மக்களின் வரிப் பணத்தை வீணாக்காதீர்கள்!

நாம் உழைத்து சம்பாதித்த பணத்திற்கான வரியை கட்டாவிட்டாலோ அல்லது தாமதமாக கட்டினாலோ 'அய்யோ அம்மா’ என்று கூக்குரலிட்டு சட்டத்தின் மூலம் மிரட்டி வட்டி அபராதத்தோடு வரியை வசூலிக்கிறது மத்திய அரசு. ஆனால் அதே மத்திய அரசாங்கம், தான் போட்ட பல்வேறு திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப் படாததால் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு அதிகரித்திருப்பது பற்றி எள்ளளவு கூட கவலைப்படாமல் இருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

மத்திய அரசாங்கம் போடும் பெரிய திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதில் சில மாதங்கள் தள்ளிப் போனால் தவறில்லை. ஆனால், சில திட்டங்கள் 16 ஆண்டு காலம் முடிந்த பிறகும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. இந்த காலதாமதப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது ரயில்வே துறை. பெட்ரோலியத் துறை, நீர்வளத் துறையும் அடுத்த இடங்களை பெற்றிருக்கின்றன. அணுமின் சக்தி, இரும்பு உற்பத்தி, மின் உற்பத்தி, நகர்ப்புற வளர்ச்சி, சுரங்கத் துறை என பல்வேறு துறைகளின் திட்டங்கள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது.

. இதனால், மத்திய அரசின் திட்டச் செலவு 4,80,282 கோடி ரூபாயிலிருந்து 5,80,781 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. டெல்லி, சத்தீஷ்கர், ஜம்மூ காஷ்மீர், மஹாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களில்தான் இந்த காலதாமதம் அதிகமாக இருக்கிறது. குஜராத்தில் வேகமாக திட்டங்கள் நிறைவேற்றப்படுவதால் செலவு பாதியாக குறைந்திருக்கிறது. நம் தமிழகத்தில்கூட சில திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காணப்படுவதால் ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவு அதிகரித்திருக்கிறது..
சீனாவில் கண் மூடி திறப்பதற்குள் பல திட்டங்களை அதிசயிக்கும் வகையில் அமைக்கிறார்கள். ஆனால், நாமோ எந்த திட்டமிடலும் இல்லாமல் காலத்தை வீணடிப்பதோடு, காசையும் பாழாக்கி உற்பத்தியும், வளர்ச்சியும் இல்லையே என்று கூக்குரலிடுகிறோம். எந்த பயனும் இல்லாமல் வீணாகும் இந்த பணம் மக்கள் கட்டிய வரிப்பணம். இதை பாழ்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை மட்டும் மத்திய அரசு மறந்துவிடக் கூடாது!

-ஆசிரியர்.