Published:Updated:

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?
பிரீமியம் ஸ்டோரி
பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?

ஹலோ வாசகர்களே..!

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:
பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?
பிரீமியம் ஸ்டோரி
பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?

ந்தியப் பொருளாதாரத்தின் மிக முக்கியச் சீர்திருத்தமாகக் கருதப்படுவது நரேந்திர மோடி அரசின் உயர் பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி அமல் படுத்தப்பட்டதும் ஆகும். ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவர காங்கிரஸ் ஆட்சியிலிருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், பணமதிப்பு நீக்கம் எனும் 500, 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தது உலகையே அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கியது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?


பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்கம், கரன்சியை கையாளும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலோடுதான் நடந்ததா என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது. இந்த நடவடிக்கை 2016 நவம்பர் 8-ம் தேதி எடுக்கப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல், 2016 டிசம்பர் 7 -ம் தேதி இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும், பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே முடிவு செய்யப்பட்டது என்றும் கூறினார். மேலும், 14-வது ஃபைனான்ஷியல் ஸ்டெபிலிட்டி அறிக்கையின் முன்னுரையில் இந்த நடவடிக்கை பொருளாதார உயர்வுக்கு உகந்தது என்றும் கூறியுள்ளார். இவர் இதற்கு முன்பு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்தவர்.

உலக அளவில் சிறந்த பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியில் 2016 செப்டம்பர் வரை கவர்னருமாக இருந்த ரகுராம் ராஜன், கடந்த புதனன்று கேம்பிரிட்ஜில் உள்ள  ஹார்வர்டு கென்னடி ஸ்கூலில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி எதிர்மறை கருத்துகளைக் கூறி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.

தன்னிடம் ஆலோசனை கேட்கவில்லை என்று எப்போதும் தான்  கூறவில்லை என்றவர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு நல்ல யோசிக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட, பயனுள்ள சீர்திருத்தமாகாது என்று, தான் மத்திய அரசுக்குக் கூறியதாக உண்மையை வெளியிட்டுள்ளார். ஆனால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இது நன்கு திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்று கூறினார்.

இவற்றிலிருந்து நமக்கு நன்கு விளங்குவது, மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேக்கத்தையும், பொது மக்களுக்குப் பெரிய அளவில் கஷ்டத்தையும் கொடுத்த இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் உடன்பாட்டுடன் முடிவெடுத்திருக்க வேண்டாமா என்பதே.

ரகுராம் ராஜனின் பணிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்று, சுப்ரமணிய சுவாமி போர்க்கொடி உயர்த்தியதை இந்த இடத்தில் கூறாமல் இருக்க முடியாது!

- ஆசிரியர்        

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism