Published:Updated:

செய்வன திருந்தச் செய்!

செய்வன திருந்தச் செய்!
பிரீமியம் ஸ்டோரி
செய்வன திருந்தச் செய்!

செய்வன திருந்தச் செய்!

செய்வன திருந்தச் செய்!

செய்வன திருந்தச் செய்!

Published:Updated:
செய்வன திருந்தச் செய்!
பிரீமியம் ஸ்டோரி
செய்வன திருந்தச் செய்!

சென்னை-சேலம் எட்டுவழி பசுமைச் சாலை விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டிய மத்திய அரசும் மாநில அரசும் பல வகைகளில் விதிகளை மீறியதற்காகத் தற்போது குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செய்வன திருந்தச் செய்!உண்மையான வளர்ச்சித் திட்டங்களுக்கு இங்கே யாரும் ஒருபோதும் எதிரியாக நின்றதில்லை. மேட்டூர் அணை, பெல் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் என்று பலவற்றுக்கும் தங்கள் நிலங்களைக் கொடுத்துவிட்டு, வேறிடம் பெயர்ந்து வாழ்பவர்கள் இதே தமிழ் மக்கள்தாம்.

இந்த எட்டுவழிச்சாலை விஷயத்தில் மட்டும் ஆரம்பம் முதலே இரண்டு அரசுகளுக்கும் தெளிவான பார்வை இல்லை என்பதுதான் பிரச்னைக்குக் காரணம். ‘கான்ட்ராக்ட் விட்டு கமிஷன் பார்த்தே ஆகவேண்டும்’ என்பதிலேயே அரசியல்வாதிகள் குறியாய் இருக்க, பாதிக்கப்பட்ட மக்கள் கொதித்தெழுந்து போராடியபோது, போலீஸை ஏவிவிட்டு விரட்டியடித்தனர்.ஆதரவுக்கரம் நீட்டியவர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக்கூடப் பாய்ச்சினர். இப்படியெல்லாம் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்திய மத்திய மற்றும் மாநில அரசுகள், இந்தத் திட்டம் தொடர்பான சட்டத்தை மதிக்கவே இல்லை என்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிரூபணமாகியிருக்கிறது. ‘திட்டத்துக்கே தடை விதிக்க நேரிடும்’ என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது நீதிமன்றம்.

ஆட்சியாளர்களின் விதிமீறல்களுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு சம்பவம். அரூர் அருகே மஞ்சம்பட்டி கிராமத்தில் 6 மரங்களை வெட்டுவதற்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு, 109 மரங்களை வெட்டியுள்ளனர். அதுவும் சாலை அமையும் இடத்துக்கு சம்பந்தமே இல்லாமல் சுமார் 30 மீட்டர் தூரத்தில் இருந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலான வயதுடைய மரங்களை வெட்டியுள்ளனர். கிராம நிர்வாக உதவியாளர் தொடங்கி, வருவாய் ஆய்வாளர் வரை இதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். ‘இது சாதாரணக் குற்றமல்ல. அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் பெற்றிருக்கும் ஜாமீனை ரத்து செய்து, அதுதொடர்பாகக் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கறார்க்குரலில் உத்தரவு பிறப்பித்துள்ளனர் நீதிபதிகள். மக்கள் ஏன் அத்தனை தூரம் கொந்தளித்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு சாட்சிகள் தேவையில்லை.

கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதிகப்படியான இழப்பீட்டை வழங்க அரசு முன்வர வேண்டும். பசுமைவழிச்சாலைத் திட்டத்தின் மூலம் 50 கிலோ மீட்டர் பயண தூரம் மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம் மிச்சமாகும் எரிபொருள், மத்திய அரசுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவற்றைக் கணக்கில்கொண்டு அதிகமான இழப்பீட்டை வழங்கவேண்டும். அதேபோல் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு அரசு புறம்போக்கு நிலங்களையும் வழங்கலாம்.

இந்த விஞ்ஞான யுகத்திலும்கூட விவசாய நிலத்தில் செருப்புக்காலுடன் நடக்கும் விவசாயியைப் பார்க்க முடியாது. ஏனென்றால், அதுதான் அவர்களுக்குத் தாய். இத்தகைய நாட்டில் மக்களின் பங்களிப்போடு திட்டங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதுதானே ஓர் அரசாங்கத்துக்கு அழகாக இருக்க முடியும்.

இனியாவது, செய்வன திருந்தச் செய்யட்டும் அரசுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism