கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

இந்த வருடத் தீபாவளி, உண்மையிலேயே தித்திக்கும் தீபாவளியாக மலர இருக்கிறது. சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தைப்போல, வரிசையாக பல செக்மென்ட்களிலும் பல கார்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. போட்டியின் காரணமாக பல கார்களுக்குத் தாராளமாகத் தள்ளுபடி கிடைக்கிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வண்ணம், விதவிதமான சாய்ஸும் கிடைக்கிறது.

அப்படி கார் சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் சாய்ஸ், ஹூண்டாய் சான்ட்ரோ. இது வாடிக்கையாளர்களுக்குக் கொஞ்சம் பழக்கப்பட்ட சாய்ஸ்தான். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் ஆகியிருக்கும் இந்த சான்ட்ரோவை, ‘ஃபேமிலி கார்’ என்கிறது ஹூண்டாய்.

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் காலூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தது இந்த சான்ட்ரோதான். அதேபோல, தான் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான பாதையை அமைக்கப்போவதும் சான்ட்ரோதான் என்று ஹூண்டாய் உறுதியாக நம்புகிறது. மாதா மாதம் சுமார் 30,000 கார்கள் விற்பனையாகும் சின்ன கார் செக்மென்ட்டில், தனது கொடியை இன்னும் மேலே பறக்க விடுவதில் ஹூண்டாய் தீவிரமாக இருப்பதால், சான்ட்ரோ ஜெயிக்க வேண்டும் என்பதில் அது தீவிரமாகவே இருக்கிறது.

அதனால்தான், தனது மற்ற கார்கள் எதிலும் இல்லாத AMT ஆப்ஷனை, சான்ட்ரோவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய். வரும் காலங்களில் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் AMT கொண்ட கார்கள் கணிசமாக விற்பனையாகும் என்ற அவர்களின் கணிப்பு இப்போது உண்மையாகியிருக்கிறது. அதேபோல BS VI நெறிமுறைகள் நடைமுறைக்கு வர இன்னும் பல காலம் இருந்தாலும், இப்போதே அந்தத் தரத்துக்கு சான்ட்ரோ தயாரிக்கப்பட ஆரம்பித்துவிட்டது.

‘பெரிதினும் பெரிது கேள்’ என்று தனது வாடிக்கையாளர்களிடம் ஹூண்டாய் கேட்கும் ஆதரவு என்பது மிகப் பெரிது. ஹூண்டாயின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது அனைத்தும் சான்ட்ரோவில் இருக்கிறதா.... வரவிருக்கும் நாட்கள் இதற்கு விடை சொல்லும்.

அன்புடன்

ஆசிரியர்