வேகத்தோடு செயல்பட வேண்டிய ஆண்டு!

2012 இனிதாக பிறந்தேவிட்டது. கடந்த ஆண்டில் நிறைவேறாத பல விஷயங்களை மத்திய அரசாங்கம் இந்த ஆண்டிலாவது நிறைவேற்றித் தருமா என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் மக்கள். உணவு பாதுகாப்பு மசோதா, நேரடி வரி மசோதா போன்றவற்றுடன் வங்கி, இன்ஷூரன்ஸ் துறைகளை சீர்திருத்தும் வேறு சில முக்கிய மசோதாக்களை மத்திய அரசாங்கம் இந்த ஆண்டிலாவது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் பொருளாதார அடிப்படை பலமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், வளர்ச்சியானது வேகமாக குறைந்து வருகிறது. காரணம், தொழில் துறையையும் விவசாயத் துறையையும் பலப்படுத்துவதைவிட, சேவைத் துறையை மட்டுமே நம்பி இருக்கிறோம் நாம். சேவைத் துறை அதிக வருமானத்தை தந்தாலும் நீண்ட காலத்தில் அதை நம்ப முடியாது. ஆனால், தொழில் துறை பல லட்சம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை தருவதோடு தொடர்ச்சியான வருமானமும் தரும்.

. விவசாயத் துறைக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த துறைக்கும் இருக்குமா என்பது சந்தேகமே. இன்றைக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று விற்கும் நிலை உருவாகி இருக்கிறது. கடந்த காலத்தில் தங்கம் தந்த லாபத்தைப் போல, இனிவரும் காலத்தில் நம் விவசாய நிலங்கள் தரப்போகின்றன. நம் விவசாயிகள் ஃபெராரி கார்களில் செல்லும் நிலை விரைவில் வரப்போவதாக சொல்கிறார்கள் தீர்க்கதரிசிகள். ஆனால், நாமோ விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணராமல் இருக்கிறோம்..
இதுவரை நடந்ததைக் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடுவோம். இனியாவது நாட்டின் முன்னேற்றமே நம் முன்னேற்றமாக நினைத்து செயல்படத் தொடங்குவோம். 2012-ல் நாம் கொஞ்சம் வேகத்தோடு செயல்பட வேண்டிய ஆண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. வாசகர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-ஆசிரியர்