ஹலோ வாசகர்களே..!

உலக அளவில் பொருளாதார ரீதியில் வேகமாக வளர வாய்ப்புள்ள மிக முக்கியமான 20 நகரங்களில் 17 நகரங்கள் நமது இந்திய நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கும் என்கிற செய்தி நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. இந்த நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் இருக்கும் என்கிற தகவல் நம்மை மேலும் சந்தோஷப்படுத்துவதாக இருக்கிறது.

வருகிற 2017 முதல் 2035 ஆண்டு வரையிலான 17 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக வளரும் நகரங்கள் எவை என்று ஆக்ஸ்போர்டு எக்னாமிக்ஸ் நிறுவனம் ஆய்வுசெய்து வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி, தமிழகத்தின் முக்கியமான ஏற்றுமதி நகரமான திருப்பூர் ஐந்தாவது இடத்திலும், தமிழகத்தின் மையப்புள்ளியாக விளங்கும் திருச்சி எட்டாவது இடத்திலும், தலைநகர் சென்னை ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலிருந்தும் மூன்று நகரங்கள் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் நம் இந்திய நாட்டைப்போல வேறு எந்த நாடும் பொருளாதார வளர்ச்சி காணவில்லை என்பது ஒருபக்கமிருக்க, நம் நாட்டிலேயே நமது தமிழகம்தான் அதிவேகமான வளர்ச்சி கண்டுவருகிறது. தமிழகத்தின் பிற நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அந்த நகரங்களும் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த ஆய்வு முடிவுகளை நமது தமிழக அரசாங்கம் அக்கறையுடன் கவனத்தில்கொள்ள வேண்டும். நன்கு பொருளாதார வளர்ச்சி காண வாய்ப்புள்ள தமிழக நகரங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அடுத்த 50 ஆண்டுகளுக்கு மாற்றியமைக்கத் தேவை இல்லாதபடிக்கு அறிவியல்ரீதியில் அமைத்துத் தரவேண்டும். சுகாதார வசதிகள், பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கையைப் பெருக்குகிற அதே நேரத்தில் அவற்றின் தரத்தையும் உயர்த்த வேண்டும். திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்க வேண்டும். எல்லோருக்கும் வேலை கிடைக்கச் செய்வதுடன், வேலையில்லாமல் யாருமே இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

அதேசமயம், வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்கிற வேலையை மக்கள் செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத ஒரு வாய்ப்பு நமது மக்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன்மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ளத் தவறக்கூடாது.

எல்லாவற்றையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என்று நினைக்காமல், அரசாங்கத்துடன் மக்களும், மக்களுடன் அரசாங்கமும் இணைந்து செயல்பட்டால், பொருளாதார வளர்ச்சியில் நம் இந்திய நாடு நம்பர் ஒன் நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

- ஆசிரியர்