Published:Updated:

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

Published:Updated:
கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

கொடைக்கானல் மலைத்தொடரில் ஒரு ஓரமாக இருக்கும் அழகான மலை கிராமம் கருவேலம்பட்டி. அழையா விருந்தாளியாக வந்த கஜா புயல், மரங்களைச் சாய்த்து, வீடுகளை இடித்து, வாழ்வா தாரங்களைச் சிதைத்துவிட்டுப் போய்விட்டது.

‘`எங்க ஊருக்கு வண்டி வாசி எதுவும் வராது..சீக்குவந்தா பிடிச்சதை நொறுங்கத் தின்னுட்டு செத்துப்போறதைத் தவிர வேற வழியில்லை. ஆதிவாசியா பொறந்துட்டு நடக்குறதுக்குத் தயங்கலாமா? எத்தனை மைலு தூரமாயிருந்தாலும் விசுக்குன்னு நடந்துபோயிருவோம். 

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்பயும் போலத்தான் இந்த மழையும்னு நினைச்சுக்கிட்டு, குடிசைக்குள்ளயே முடங்கிட்டோம். காத்தோட போக்கு நேரம் ஆக ஆக, உக்கிரமாச்சு. யாத்தீ என்னமோ ஆகப்போகுதுன்னு பயந்துகிட்டு, பிள்ளை குட்டிகளைத் தூக்கிக்கிட்டு எல்லாரும் பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டோம். ஊருக்குக் காவக்காரன் மாதிரி இருந்த தோதகத்தி மரம் வேரோடு சாயவும் ஈரக்குலையே ஆடிப்போச்சு. எங்க தாத்தா, அப்பனையெல்லாம் பாத்த மரம்...எங்க காலத்துல சாய்ஞ்சுடுச்சு...’’ வீடு இடிந்ததை விட, மரம் விழுந்த வேதனை கருவேலம்பட்டி முத்துச்சாமியின் முகத்தில் படர்கிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நீண்டன கருணைக் கரங்கள். ஆனால், கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு முதல் இரண்டு நாள்கள் வெளியுலகத்திற்கே தெரியவில்லை. பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் நேரடியாகப் பல இடங்களை ஆய்வு செய்த பிறகு, பாதிப்புகள் குறித்து விகடனுக்குத் தெரியப்படுத்தினார். நாம் அதை உலகின் பார்வைக்குக் கொண்டு சென்ற பிறகே அரசின் படை பரிவாரங்கள் பாதிப்பைப் பார்வையிட்டன. கொடைக்கானல் பகுதிக்கும் உதவிக்கரங்கள் நீண்டன.

இருப்பினும், வெளியுலகத் தொடர்பே இல்லாத மலைச்சிகரங்களில் வாழும், தொல்குடிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு வெளியுலகத்திற்குத் தெரியாமலே போனது. புயலால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? அவர்களுக்கு என்ன உதவிகள் தேவைப்படும் என்ற தேடலில் இறங்கியது விகடன். விகடன் வாசகரும், கொடைக்கானல் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான சமூக ஆர்வலர் மைக்கேல், நமக்குப் பேருதவியாக இருந்தார்.

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

கொடைக்கானல் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட கருவேலம்பட்டி, செம்பரான் குளம், கும்பூர், மூங்கில் பள்ளம் முதலான பாதிப்புக்குள்ளான மலை கிராமங்களைத் தேர்ந்தெடுத்தோம்.

வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக அரிசி, மளிகைப்பொருள்கள், கம்பளி போன்ற நிவாரணப் பொருள்களுடன் கருவேலம்பட்டிக்குப் பயணமானோம். சரியான சாலைவசதிகள் இல்லாத மலைக்கிராமம். பல வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்திருந்தன. அனைத்தையும் இழந்து, பள்ளி மைதானத்தில் கூடியிருந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினோம். இவ்வளவுதூரம் நாம் வந்ததில் எல்லோருக்குமே அவ்வளவு மகிழ்ச்சி.

‘`மலை மலையா அலைஞ்சி விளக்குமாறு அறுக்குறதுதான் பொழப்பு. ஒருநாள் முழுக்க அறுத்துக் கீழ கொண்டுபோனா, குதிரை வாடகை கொடுத்தது போக, நாப்பது ரூபாய் நிக்கும். அதை வெச்சுத்தான் பொழப்பு ஓடுது. எங்க ஊருக்கு நல்ல பாதை அமைச்சிக்கொடுத்தா எங்க வாழ்க்கை மாறும். அரசாங்கத்துகிட்ட சொல்லி அதுக்கு ஏற்பாடு பண்ணிக்குடுங்கண்ணா...’’ ஏக்கத்துடன் ஒலித்தது கருவேலம்பட்டி பிரியாவின் குரல். 

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

திரும்ப வரும் வழியில் செம்பரான்குளம் தொல்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினோம். அடுத்த நாள் காலையில் கொடைக்கானலின் கடைசியில் இருக்கும் மூங்கில் பள்ளம் கிராம மக்களுக்கு உதவி வழங்குவதாகத் திட்டம். மன்னவனூருக்குக் கீழே இருக்கும் கும்பூர் கிராமத்தை அடைந்தோம். ஊருக்கு வெளியே புறக்கடை பக்கமாகச் செல்லும் ஒற்றையடிப் பாதைதான் மூங்கில் பள்ளம் கிராமத்திற்கான தேசிய நெடுஞ்சாலை. ஒற்றையடிப் பாதையில் ஒன்பது கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். இடையில் ஏணிப்பள்ளம் என்ற இடம் இருக்கிறது. பாறையில் அடித்து வைத்துள்ள இரும்பு ஆப்புகளின் மீது கால் வைத்துதான் மேலே ஏற வேண்டும். தலையில் சுமையுடன் இந்தப் பாதையில்தான் இந்த மக்கள் பயணிக்கிறார்கள். நமது வருகையைத் தெரிவித்திருந்த நிலையில், குடும்பத்திற்கு ஒருவர் வீதம் கும்பூர் வந்துவிட்டனர். 

கைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்!

‘`எங்களுக்கு உதவி செய்றதுக்காக வந்த உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால்தான் நாங்களே வந்துவிட்டோம்’’ என வெள்ளந்திச் சிரிப்புடன் வரவேற்றார்கள் வனமக்கள். அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு, நிவாரணப் பொருள்களை வழங்கினோம். ‘`அரசாங்கம்கூட எங்களைக் கண்டுகொள்ளாத நிலையில், எங்களுக்கு உதவி செய்வதற்காக வந்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது!’’ என நெகிழ்ந்தார்கள். ``உங்கள் புன்னகைதான் நீங்கள் கொடுக்க வேண்டிய நன்றி’’ என்றோம், அத்தனை முகங்களிலும் பூத்து மறைந்தது புன்னகைப் பூ.

விகடன் டீம் - படங்கள்: வீ.சிவக்குமார் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism