Published:Updated:

பணத்தின் அருமை தெரிந்து நடப்போம்!

பணத்தின் அருமை தெரிந்து நடப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பணத்தின் அருமை தெரிந்து நடப்போம்!

பணத்தின் அருமை தெரிந்து நடப்போம்!

ஹலோ வாசகர்களே..!

பணத்தின் அருமை தெரிந்து நடப்போம்!

பணத்தின் அருமை தெரிந்து நடப்போம்!வ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் நிதி தொடர்பான விஷயங்களில் நம் மக்களில் பெரும்பாலானோர் ஒழுங்கினைக் கடைப்பிடிக்காதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு நாணயம் விகடனின் இந்த வார அட்டைப்படக் கட்டுரையே நல்லதோர் உதாரணம். பணத்தைப் பெருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கவேண்டியதுதான். அதற்காக சாத்தியமே இல்லாததை எல்லாம் நம்பி, பணத்தைப்போடுவது எவ்வளவு பெரிய அறியாமை! அப்படிப் போட்ட பணம் திரும்பக் கிடைக்காதபோது கூச்சல் போட்டு என்ன பயன்?

அளவுக்கதிகமான பணத்தை வைத்திருப்பவர்கள் ஏமாற்றுத் திட்டங்களில் போட்டு இழப்பது ஒருபக்கம் எனில், எடுத்ததற்கெல்லாம் கடன் வாங்கிக் காலம் தள்ளுகிற நடுத்தர வர்த்தகத்தினரின் அறியாமை இன்னொரு பக்கம்! கிரெடிட் கார்டிலும், பர்சனல் லோன்மூலமாகவும் வீட்டு உபயோகத்துக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்குவது 2018-ம் ஆண்டின் கடைசிக் காலாண்டில், அதற்கு முந்தைய ஆண்டின் கடைசிக் காலாண்டினைவிட 31% அதிகரித்திருப்பதாக ட்ரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) என்கிற நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மக்கள் அதிக அளவில் கடன் வாங்குவது, பொருளாதார வளர்ச்சிக்கான ஓர் அறிகுறியாகச் சிலர் சொன்னாலும், தனிநபர்கள் கடன்காரர்களாக மாறிவருகிறார்கள் என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கடன் வாங்கவே கூடாது என்கிற பழைய சிந்தனை நமக்குத் தேவையில்லை. ஆனால், என்ன வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறோம் என்பதுகூட தெரியாமல், நம் மக்கள் கடன் வாங்குவது எவ்வளவு பரிதாபம்! கிரெடிட் கார்டு அல்லது தனிநபர் கடன்மூலமாகப் பொருள்களை வாங்கும்போது 16 சதவிகிதத்துக்குக் குறையாமல், வட்டி கட்டவேண்டிய நிலை ஏற்படுகிறது என்கிற உண்மையைப் பலரும் புரிந்துகொள்வதே இல்லை. இப்படிக் கடன் வாங்கிப் பொருள்களை வாங்குவதற்குப் பதிலாக மாதந்தோறும் சில ஆயிரம் ரூபாயைச் சேமித்து வாங்கினால், வட்டியாக சில நூறு ரூபாய்கள் நமக்குக் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கில் கட்டவேண்டிய வட்டிப் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த உண்மையை உணர்ந்துகொண்டால், கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயராது என்பது நிச்சயம்.

முதலில், கடனுக்கான வட்டி குறித்து கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் கற்றுத்தரப்பட வேண்டும். ஒரு வட்டியை (12%) ஒரு சதவிகித வட்டி என்று புரிந்துவைத்திருப்பவர்கள்  இன்றைக்கும் பலர் உண்டு. ஒரு பொருளை வாங்கும்போது அதற்கான வட்டி எவ்வளவு என்று கேட்காமலே பொருளை வாங்கிச் செல்பவர்களும் உண்டு. ‘எனக்குக் கணக்கு வராது’ என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதன்மூலம் நாம் இழக்கும் பணத்துக்கு அளவே இல்லை.

இனியாவது நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் அதன் அருமை தெரிந்து செலவு செய்வோம். அறியாமையினால் பணத்தை இழப்பதைத் தவிர்த்து, அரசினால் முறைப்படுத்தப்பட்ட முதலீடுகளைப் பயன்படுத்தி, நம் பணத்தை பல மடங்காகப் பெருக்கப் பாடுபடுவோம்!

 - ஆசிரியர்   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz