திருவாய் திறப்பாரா சோனியா காந்தி?

ஏழை நாடு, ஊழல் தேசம்... இப்படி நம் நாட்டை பற்றி பலரும் 'நெகட்டிவ்’-ஆக பேசுவது ஒரு பக்கமிருக்க, இந்தியா மாதிரியான ஒரு ஜனநாயக அரசாங்கத்தை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது என பலரும் புகழ்வது நமக்குப் பெருமைதான்!

இந்த தேசத்தில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்! ஏழையோ, பணக்காரனோ அந்த சட்டத்தின் முன் சரிசமமாக நடத்தப்படுவதே நம் நாட்டின் நடைமுறை. நீதியும் நேர்மையும் கூடிய இந்த நடைமுறையைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்க முற்பட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி. 2001 முதல் 2010 வரை அவருடைய வருமான வரித் தாக்கல்களை வெளியிடும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அவரிடம் கேட்க, அவரோ, அந்த விவரங்களை வெளியிடுவதில் பொதுநல நோக்கம் எதுவும் நிறைவேறப் போவதில்லை என்று காரணம் கூறி மறுத்துவிட்டார்.

. ஒருவரின் வரித் தாக்கல் குறித்த தகவல் ரகசியமானது. அதை வெளியிடத் தேவையில்லை என்பது சாதாரண மனிதர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் வேண்டு மானால் பொருந்தி வரலாம். ஆனால், சோனியா காந்தி தொழிலதிபரும் இல்லை; சாதாரண மனிதரும் இல்லை. அவர் பொது வாழ்க்கை பொறுப்பில் உள்ள ஒரு அரசியல்வாதி. பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் தலைவர். அவரது வருமான வரித் தாக்கல் வெளியாவதில் அவருக்கு என்ன பாதகம் உண்டாகிவிடும் என்று அவர்தான் சொல்ல வேண்டும்..
தவிர, இவரால் பதவியில் அமர்த்தப்பட்ட பாரத பிரதமரே தன்னுடைய சொத்துக் கணக்கை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் தங்கள் சொத்துக் கணக்கை வெளியிட்டார்கள். அவர்களுக்கெல்லாம்கூட வராத தயக்கம் சோனியாவுக்கு மட்டும் ஏன் வருகிறது? மடியில் கனமில்லை என்றால், சோனியா பயப்பட வேண்டியதன் அவசியம்தான் என்ன? திருவாய் திறந்து பதில் சொல்வாரா சோனியா?

-ஆசிரியர்.