கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கட்டும்!

வரலாறு காணாத மின் தட்டுப்பாட்டினால் தமிழகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. சென்னையில் இரண்டு மணி நேரம், பிற மாவட்டங்களில் எட்டு முதல் பத்து மணி நேரம் என மின் நிறுத்தம் கோர தாண்டவமாடுகிறது.

மாணவர்கள் பரிட்சைக்குப் படிக்க முடியாமல் சொல்ல முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்க, எல்லாத் தொழிற்சாலைகளுக்கும் வாரம் ஒருநாள் கட்டாய மின் விடுமுறை அறிவித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்குப் புதிய வேட்டு வைத்திருக்கிறது அரசாங்கம். இந்த கட்டாய விடுமுறையால் தொழிற்சாலைகளின் செலவு கணிசமாக அதிகரிக்கும். தொழிலாளர்கள் சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.

. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவைப் பெறுவதே. கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் போட்டி போட்டு, புதிய மின் உற்பத்தித் திட்டங்களை கொண்டு வராமல் இருந்துவிட்டன. கூடங்குளம் பிரச்னையிலும் அரசியல் கட்சிகள் தங்கள் லாபத்திற்கு ஊதிப் பெரிதாக்க நினைத்ததே ஒழிய, நாட்டின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்கவில்லை. கூடங்குளத்தில் அரசாங்கம் செய்திருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லி, மக்கள் ஆதரவைப் பெறுவதை விட்டுவிட்டு, பிரச்னை பலூனை வெடிக்க வைக்கவே முயற்சித்து வருகிறது. .
இன்றைய மின் பற்றாக்குறையை பார்க்கும்போது, கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்குவதை மத்திய, மாநில அரசாங்கங்கள் இனியும் தள்ளிப் போடக் கூடாது. உடனடியாக அந்த மின் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், கூடங்குளத்தினால் மட்டுமே நம் மின் தேவை பூர்த்தி அடைந்துவிடாது. குறைந்தது ஐந்தாயிரம் மெகாவாட் அளவுக்கு புதிய மின் திட்டங்களை கொண்டு வந்தால் மட்டுமே எதிர்காலத்தில் தமிழகம் நிரந்தரமாக ஒளிரும்! உற்பத்தி வளர்ச்சியிலும் முதல் மாநிலமாக விளங்கும்!

- ஆசிரியர்