பிரீமியம் ஸ்டோரி

தீயவற்றை தீர்த்துக் கட்டுவோம்!

அன்பு வாசகர்களே

ந்தியா வல்லரசாக வேண்டும் என்கிற ஆசை நம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அதற்குத் தேவையான எந்த மாற்றமும் ஏற்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள் உலகப் புகழ் பெற்ற சில நிபுணர்கள். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கட்டுரைகளில்தான் இந்த கருத்தை அவர்கள் ஆணித்தரமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

##~##
இந்தியாவின் வளர்ச்சி பலவிதங்களில் பிரமிப்பூட்டுவதாக இருந்தாலும் ஜாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கும் நம் சமூக அமைப்பு, அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, மலிந்துவரும் ஊழல், எல்லாவற்றையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என்று நினைக்கிற மனோபாவம்... இதுபோன்ற பல காரணங்கள் வளர்ச்சியை குழிதோண்டி புதைத்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் அந்த நிபுணர்கள்.

வளர்ச்சியை நோக்கிய திட்டங்கள், எல்லோருக்கும் பொருளாதார மேம்பாடு, சமூக பாகுபாடு இன்மை, எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற, வெளிப்படையான அரசாங்கம் போன்ற பல விஷயங்களை நம் போட்டி நாடுகள் உளப்பூர்வமாகப் பின்பற்றும்போது, நாம் மட்டும் காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளைப் பின்பற்றினால் நம்மால் எப்படி வல்லரசாக முடியும்?

நம்மை மாற்றிக் கொள்வதற்குச் சரியான தருணம் இது. இனியாவது நாம் மாறுவோம். நம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் தீய விஷயங்களை தீர்த்துக் கட்டுவோம்!

-ஆசிரியர்

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு