பிரீமியம் ஸ்டோரி

அரசு நிறுவனங்கள் லாபம் தராதா?

அன்பு வாசகர்களே

டந்த வாரம் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல் நாடாளுமன்றத்தில் சொன்ன தகவல் உண்மையிலேயே அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. மினிரத்னா என்று அழைக்கப்படுகிற 67 பொதுத்துறை நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் கடந்த மூன்றாண்டுகளாக எந்த லாபத்தையும் சம்பாதிக்காமல் நஷ்டம் மட்டுமே தந்து கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார் அமைச்சர்.

தொலைபேசி நிறுவனமான பி.எஸ்.என்.எல்., சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட், இந்தியா டூரிஸம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் போன்ற எட்டு நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. பட்டியலில் இடம் பெறவில்லை என்றாலும் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் தந்து கொண்டிருப்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

##~##
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் ஏதோ ஒருமுறை நஷ்டம் என்பது இயல்பான விஷயம்தான். அதற்காக தொடர்ச்சியான நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. உதாரணமாக, தொலைதொடர்புத் துறையில் இருக்கும் ஏர்டெல், ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக லாபம் சம்பாதிக்கும்போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மட்டும் எப்படி நஷ்டம் வரும்? ஆக, நிர்வாகத்திலோ அல்லது அரசின் கொள்கையிலோ பிரச்னை என்பது தெளிவாகிறது.

ஆனால், ஒரு நிறுவனம் லாபப் பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டுமென்றால் நிர்வாகம் மட்டுமல்லாமல் அதன் ஊழியர்களும் ஈடுபாட்டோடும் ஊக்கத்தோடும் செயல்பட வேண்டும். மக்களின் வரிப் பணத்திலிருந்து செயல்படும் இந்நிறுவனங்கள் அலட்சியப் போக்கை கைவிட வேண்டும். ஆயில், பெட்ரோலியத் துறை மற்றும் பல அரசுத் துறை நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து லாபம் சம்பாதிக்கும்போது, இந்த நிறுவனங்களில் மட்டும் என்ன பிரச்னை என மத்திய அரசு ஆராய வேண்டும்.

காயம் சிறிதாக இருக்கும்போது மருந்திட்டால் நிச்சயம் குணப்படுத்திவிடலாம். புரையோடிப் போன பின் வருந்துவதில் எந்த புண்ணியமும் இல்லை!

-ஆசிரியர்

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு