வெறும் நம்பிக்கை மட்டும் போதாது!

அசாத்தியமான தைரியத்துடன் இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி குறித்து எஸ் அண்ட் பி

ரேட்டிங் நிறுவனம், 'ஸ்டேபிள்’ என்கிற நிலையிலிருந்து 'நெகட்டிவ்’-ஆக மாற்றியது பற்றி அவர் கொஞ்சம்கூட கவலைப்படவும் இல்லை; சீரியஸாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. 'இது ஒரு எச்சரிக்கைதான். ஆனால், நாங்கள் அதைத் தாண்டி வந்துவிடுவோம்’ என்று துணிச்சலோடு சொல்லி இருக்கிறார்.

பிரணாப்பின் இந்த நம்பிக்கையை நிச்சயம் பாராட்டலாம். ஆனால், வெறும் நம்பிக்கை மட்டுமே பிரச்னைகளுக்குத் தீர்வாகிவிடுமா? 2010-11-ல் நம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2.6%. ஆனால், 2011-12-ல் அது 3.6 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. 4.6 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை 5.9 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இதற்கு நேரெதிராக 8.6 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.டி.பி. வளர்ச்சி 6.9 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

. இப்படி வளர்ச்சியானது நாளுக்கு நாள் தளர்ந்து கொண்டிருக்க, அதை சரி செய்கிற எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. எண்ணெய் மற்றும் உரங்களுக்கான மானியத்தைக் குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொருட்களுக்கான சேவை வரியை (ஜி.எஸ்.டி.) நடைமுறைபடுத்துவதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறது. வங்கி, இன்ஷூரன்ஸ், மின்சாரம், நீதித் துறைகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்ய காலம் தாழ்த்துகிறது..
கட்டாயம் செய்தாக வேண்டிய இந்த விஷயங்களைச் செய்யாமல் இருப்பது ஒருபக்கமிருக்க, பின்தேதியிட்டு வரி கட்டும்படி உத்தரவிடுவது போன்ற செய்யக்கூடாத வேலைகளை மட்டும் கச்சிதமாகச் செய்து வருகிறது. இப்படியே போனால் வெளிநாட்டு மூலதனம் நம் நாட்டுக்கு எப்படி வரும்? நம் பொருளாதாரம் எப்படி முன்னேறும்? போனது போகட்டும் பிரணாப்ஜி, வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைக்காமல் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்.

-ஆசிரியர்