முதல்வரே, பாஸ் மார்க் போதாது!

ஓராண்டு கால ஆட்சியை குதூகலத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த ஓராண்டு கால ஆட்சிக்காக தமிழக மக்கள் அவருக்கு பாஸ் மார்க் அளித்திருக்கிறார்கள். இந்த மதிப்பெண் குறைவு என்றாலும் பாஸாகிற அளவுக்கு மதிப்பெண் வாங்கியதற்காக பாராட்டத்தான் வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமலே இருந்த பஸ் மற்றும் மின் கட்டணத்தைத் துணிந்து உயர்த்தியது, தொழிற் துறை அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயிக்கும் 2023 விஷன் டாக்குமென்டை வெளியிட்டது, பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது என பல துறைகளில் முந்தைய ஆட்சியாளர்களிடம் இருந்து தனித்து தெரிகிறார் ஜெயலலிதா.
##~## |
மின் பற்றாக்குறையால் தொழிற் துறை நிறுவனங்கள் அனுபவிக்கும் கஷ்டம் கொஞ்சம்கூட குறையவில்லை. அடிப்படை கட்டுமான வசதிகளில் முன்னேற்றம் இல்லை. கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சி முழுவேகத்தில் நடக்கவில்லை. டாஸ்மாக் கடைகளின் அதிக வருமானம் பெறுவதில் இந்த அரசாங்கம் காட்டும் அக்கறை, மக்களின் நலனைப் பேணுவதில் காட்டவில்லை. ஊழலை ஒழித்து, அதிகாரங்களை பகிர்ந்தளித்து, வளர்ச்சியை நோக்கி இந்த மாநிலத்தைக் கொண்டு செல்லும் முயற்சி இல்லை.
முதலாம் ஆண்டில் பாஸ் மார்க் வாங்கிவிட்டோம் என்று திருப்தி அடைந்துவிடாமல், ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு செயல்படுங்கள்!
-ஆசிரியர்.

