'விவாகரத்து பெற்ற பெண்களுக்கு, கணவனின் அசையா குடியிருப்பு சொத்துக்களில் இனி பங்கு உண்டு' என்று சொல்லிஇருக்கிறது மத்திய அரசு. இதைப் பற்றித்தான் நாடு முழுக்க இப்போது பேச்சாக இருக்கிறது தோழிகளே!

'இது எந்த அளவுக்கு பெண்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கும்?' என உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழியிடம் பேசிக் கொண்டிருந்தபோது... அவர் சொன்ன விஷயங்கள் மூலம், இத்தனை காலமாக விவாகரத்து விஷயத்தில், எந்த அளவுக்கு பெண்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நன்கு உணர முடிந்தது!

''விவாகரத்து வழக்குகளில், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கச் சொல்லி நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கும். ஆனால், எத்தனை பெரிய பணக்காரராக இருந்தாலும்கூட, 'எனக்கே வாழ்வதற்கு வழியில்லை' என்று பஞ்சப்பாட்டு பாடி, தப்பிப்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது. 'சல்லிக் காசுகூட தரமாட்டேன். என்னைப் பிரிந்து அழிந்து போகட்டும்' என்கிற ஆணாதிக்க மனோபாவ வெளிப்பாடுதான் இது.

'கணவன் கைவிட்டால், பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்பு இருக்கும்' என்கிற பயத்தில்தான், அவன் எத்தகைய கொடுமைக்காரனாக இருந்தாலும், 'விவாகரத்து' ஆயுதத்தை எடுக்கத் தயங்குகிறார்கள் பெண்கள். 'கல் நெஞ்சன் ஆனாலும் கணவன், புல்லுருவி ஆனாலும் புருஷன்' என்ற பயம் கலந்த போதனையும் இதன் விளைவே!

'இதை மாற்ற வேண்டும்' என்று பெண்கள் அமைப்புகள் நெடுங்காலமாக நடத்திய போராட்டம் காரணமாகத்தான், 'கணவனின் சொத்தில் பங்கு' என்கிற சட்ட திருத்தம் வந்திருக்கிறது.

இத்தனை காலமாக, பெண்கள் பயந்து கொண்டிருந்த நிலை மாறி, இனி... ஆண்கள் பயந்து ஒதுங்க ஆரம்பிக்கும் சூழ்நிலையை இது ஏற்படுத்தியிருக்கிறது. வேண்டுமென்றே பெண்களுக்கு எதிராக விவாகரத்து ஆயுதத்தை கையில் எடுக்கும் ஆண்கள், சொத்து பறிபோய்விடுமே என்று இனி பயப்படுவார்கள். இதனால், மனைவியை விவாகரத்து நோக்கி துரத்துவதுகூட குறையலாம்.''

அருள்மொழி சொல்வது நியாயம்தான். ஆனால், சட்டத்தின் மூலமாகத்தான் இதெல்லாம் நடக்க வேண்டும் என்கிற நிலை நீடிப்பது, வருத்தமான விஷயம்தானே. மனரீதியான மாற்றங்கள்தானே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்!

உரிமையுடன்

ஆசிரியர்