நம்மால் முடியாதா?

காவிப் படைத் தலைவர்... சிறுபான்மை மக்களின் விரோதி... இப்படிப்பட்ட விமர்சனங்களை சிலர் சொல்லிக்கொண்டிருந்தாலும், இந்தியத் தொழிற் துறையின் தவிர்க்க முடியாத முகமாக மாறி வருகிறார் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி. அண்மையில் அவர் நடத்திய 'வைப்பிரன்ட் குஜராத் சம்மிட்’ மீண்டும் மிகப் பெரிய வெற்றி பெற்று பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை குஜாரத்துக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக நாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் உயர்ந்து வருவதோடு, முதலீட்டின் அளவும் கணிசமாக அதிகரித்து வருகிறது. 2003-ம் ஆண்டில் முதல் மாநாடு நடந்தபோது கிடைத்த முதலீடு வெறும் 6.6 கோடிதான். அடுத்த தடவையே இது ஒரு லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இப்போது நடந்த மாநாட்டில் 20.83 லட்சம் கோடி ரூபாய் முதலீடாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

. வெளிநாட்டு முதலீட்டைக் கவர்ந்திழுப்பதில் குஜராத் மாநிலம் இவ்வளவு சிறப்பாகச் செயல்படும் போது, தமிழகத்தால் மட்டும் முடியாதா என்ன? ஆனால், வெளிநாட்டு முதலீடு நம் மாநிலத்தில் குவிவதற்கு முன்பு சில அடிப்படையான வேலைகளைச் செய்ய வேண்டும். முக்கியமாக, மின் உற்பத்தியை நாம் கணிசமாக அதிகரிக்க வேண்டும். வீடுகளில் மக்களுக்குத் தேவைப்படும் மின்சாரமே சரிவரக் கிடைப்பதில்லை என்கிறபோது தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்சாரம் மட்டும் தாராளமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?.
மின் உற்பத்திக்கு அடுத்து, சாலைப் போக்குவரத்து வசதியையும் பெருமளவில் அதிகரிக்க வேண்டும். குண்டும் குழியுமாகக் கிடக்கும் சாலைகளை வைத்து வெளிநாட்டு முதலீட்டை அல்ல, உள்நாட்டு முதலீட்டையே உயர்த்த முடியாது.

ஆட்சியாளர்கள் நினைத்தால் ஆயிரம் பிரச்னைகள் கொண்ட குஜராத்தையே இந்த அளவுக்குக் கொண்டுவர முடியும் என்கிறபோது, அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் ஏன் முடியாது?

- ஆசிரியர்