'கறுப்பு' அறிக்கை!

பல்வேறு நாடுகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணம் பற்றி மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை என்ற பெயரில் சில விவரங்களை சமர்ப்பித்து இருக்கிறார். இதை வெள்ளை அறிக்கை என்பதைவிட, ஒட்டுமொத்த உண்மைகளையும் இருட்டடிப்பு செய்யும் 'கறுப்பு அறிக்கை' என்றே சொல்லலாம். சாதாரண பாமரனுக்குக்கூட ஏற்கெனவே தெரிந்த விவரங்களை, இன்னும் வழவழ கொழகொழ பாணியில் கோர்த்துக் குழப்பி அவர் அளித்திருக்கும் அறிக்கை, இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு மேலும் சரிவை உண்டாக்கவே உதவும்.

நம் அரசாங்கத்தை ஏய்த்து, கோடான கோடி பணத்தை எந்தெந்த முதலைகள், எந்தெந்த நாட்டு வங்கிகளில், எத்தனை மூட்டைகளை பதுக்கி வைத்துள்ளன என்பதைப் பற்றி எதுவும் சொல்லாமல்... அந்தப் பணத்தை மீட்டு வருவதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் இருக்கிறது என்று வாயைத் திறக்காமல் பொத்தாம் பொதுவாக அறிக்கை வாசித்து கடமையைக் கழித்துக் கொள்வதற்கு எப்படித்தான் அவர் மனசாட்சி இடம் அளித்ததோ..!

. கறுப்புப் பண விஷயத்தில் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை இப்படித்தான் இருக்கும் என்றால், வரி ஏய்ப்பு செய்யும் குள்ள நரிகளுக்கு மொத்தமாகக் குளிர் விட்டுப் போகாதா? குறுக்குப் புத்திக்காரர்கள் ரொம்பவே தெம்பு அடைந்து, அரசாங்கத்தின் கைகளை இன்னும் இறுக்கமாகக் கட்டிப் போடும் வேலையில் இறங்கிவிட மாட்டார்களா? வெளிப்படையாக உரிமை கொண்டாடுவதற்கு நாதியில்லாமல் கிடக்கும் இந்த பணத்தைக் கொண்டுவர, தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம்தான் இந்த அரசாங்கம் இதுவரை செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடமுடியும்..
அநியாயத்துக்கும் அலட்சியம், மக்களின் வலி அறியாத ஆணவம் என்பதையே தன் கொள்கையாக கொண்டு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு போய்க் கொண்டிருந்தால்... அடுத்து வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு மொத்தமாகக் கறுப்புக் கொடி காட்டத்தான் போகிறார்கள்!

-ஆசிரியர்