மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

மன்மோகன் என்கிற முகமூடி!

அன்பு வாசகர்களே

டுத்த நிதி அமைச்சர் பதவியை வேறு யாருக்கும் தராமல் தானே வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். காங்கிரஸின் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.களில் ஒருவர்கூட இந்த பதவிக்கு லாயக்கானவர் கிடைக்கவில்லையா? இல்லை, இந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை தேர்வு செய்யும் திராணிதான் காங்கிரஸ் தலைமைக்கு இல்லாமல் போய்விட்டதா?

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஏற்கெனவே நான்கு துறைகள் இருக்கிறது. தவிர, அனைத்து அமைச்சர்களையும் வழிநடத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் நிதி அமைச்சர் என்கிற மிக முக்கியமான பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுக்கொண்டால் அவரால் எப்படி அத்துறைக்கான வேலையை முழுக் கவனத்துடன் செய்ய முடியும்?

##~##
நிதி அமைச்சர் பதவி என்பது அலங்காரப் பதவி அல்ல; நாள் முழுக்க அணு அணுவாக யோசித்து, நுட்பமான பிரச்னைக்குகூட தீர்க்கமாக முடிவு காண வேண்டிய பதவி. அதிலும், இன்றைக்கு இருக்கும் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் நிதி அமைச்சருக்கு இருக்கும் பொறுப்பு, வேறு எந்த ஒரு அமைச்சருக்கும் இருக்க முடியாது. இத்தனை முக்கியத்துவம் கொண்ட ஒரு பதவிக்கு தனியாக ஒருவரை நியமிப்பதுதானே நியாயம்?

ஆனால், இன்றைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் என்ன நினைக்கிறார்? வெளிநாட்டிலிருந்து வரும் டாலரை நம் அத்தனை பிரச்னைகளுக்குமான சர்வரோக நிவாரணியாகப் பார்க்கிறார். வெளிநாட்டினர் நம் பாண்டுகளில் செய்யும் முதலீட்டை அதிகரிக்கிறார். நம் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வாங்கும் கடன் அளவை உயர்த்துகிறார். டாலர் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைப்பது புணுகு தடவி புற்றுநோயை மறைப்பது போலத்தான்.

மன்மோகன் சிங்கிற்கு இது தெரியாதா? அல்லது, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது போல, மன்மோகன் சிங்கின் 'அப்பாவி அறிவுஜீவி’ முகத்தையே கேடயமாக நிறுத்தி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கட்சி செய்யும் மற்றொரு சதியா இது?

-ஆசிரியர்.

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே