பிரீமியம் ஸ்டோரி

கொள்ளை போகும் தேசம்!

அன்பு வாசகர்களே

டிட்டர் ஜெனரலின் அறிக்கையிலிருந்து மீண்டுமொரு பூதம் கிளம்பி வெளியே வந்திருக்கிறது. இப்போது வெளியே வந்திருப்பது நிலக்கரி பூதம். 2004 தொடங்கி 2009 வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்களை நூற்றுக்கும் அதிகமான கம்பெனிகளுக்கு அளித்ததால் மத்திய அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறது ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை.  

இந்த முறைகேட்டின் பின்னணியில் பிரதமர் அலுவலகம் உள்பட பலரும் சிக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது. 2ஜி அலைக்கற்றையில் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைவிட இது மிகப் பெரிதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

##~##
நம் நாட்டில் வறுமை கோரதாண்டவமாடுகிறது. நாளன்றுக்கு முப்பது ரூபாய்கூட சம்பாதிக்க முடியாதவர்கள் பல கோடி பேர். வளர்ச்சித் திட்டங்களை நடத்த அரசிடம் பணமில்லை. புதிய திட்டங்களை செயல்படுத்த வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம். ஆனால், அரசுக்கு சேரவேண்டிய வளங்களை சிலர் தங்கள் விருப்பத்திற்குக் கொள்ளை அடித்து, பெரும் பணம் சேர்க்கிறார்கள்.  நம் நாடு ஏற்கெனவே மோசமான பொருளாதார நிலையில் இருக்கிறபோது, இந்த சுரண்டல் நம்மை மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறது.  

இந்த இழிநிலைக்குக் காரணம், அரசியல்வாதிகள். இந்த தேசத்தின் அனைத்து வளங்களும் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தம் என்று நினைத்து, அவற்றை பாதுகாக்காமல் கொள்ளையர்களோடுச்  சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிப்பதைத்தானே லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்!

ஆகாய மார்க்கத்தில் அலைக்கற்றை ஊழல், நிலமார்க்கத்தில் நிலக்கரி ஊழல் என்று இயற்கை படைத்த பஞ்சபூதங்களையும் சுரண்டிச் சாப்பிடும் இந்த அரசியல்வாதிகள் யாருக்கும் வெட்கமில்லை. இவர்களை மாறி மாறி ஆட்சியில் அமர்த்திவிட்டு, 'இவர்களுக்கு அவர்களே மேல்’ என்று புலம்புவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை!

                                - ஆசிரியர்.

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு