அறிமுகமான அடுத்த நொடியே... 'நீங்க ஃபேஸ்புக்ல இருக்கீங்கதானே!'' என்று கேட்கும் அளவுக்கு ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே போகிறது சமூக வலைதளமான ஃபேஸ்புக். சந்தோஷம், கவலை, ஆச்சர்யம் என்று பலவித பகிர்தல்கள் மூலமாக ஃபேஸ்புக்கில் கிடைக்கும் ஆனந்தம், ஆறுதல், அறிவு எல்லாமே வியப்புக்குரியவையே!

அதேசமயம், இந்த 'ஃபேஸ்புக்' கலாசாரத்தில் சிக்கிக்கொண்டு, பலவிதமான அவதிகளில் சிக்கித் தவிப்பவர்களை நினைக்கும்போது, அது கவலைக்குரியதாகவும் இருக்கிறது! அறியும் பருவத்திலிருக்கும் நாமே சமயங்களில் சறுக்கிவிடும்போது... 'அறியாப்பருவத்தினரான' குழந்தைகள் எம்மாத்திரம்?!

இதோ... சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் பள்ளி மாணவன், தன் வகுப்பறையில் செல்போன் மூலமாக எடுத்த போட்டோவை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்ய, 'பள்ளியில் செல்போன் உபயோகித்தான்’ என்கிற காரணத்தைச் சொல்லி சஸ்பெண்ட் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம். இப்போது பெற்றோர் போராடிக் கொண்டிருக்கிறார்கள் மகனின் கல்விக்காக!

இதைக் கேள்விப்பட்டதுமே... 'என் பிள்ளைகளுக்கு இன்றுவரை செல்போன், ஃபேஸ்புக் இதெல்லாம் கிடையாது' என்று ஒருதடவை ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

''தனித்தனியா வாழ்க்கை நடத்துற வெளிநாட்டவர்கள், ஃபேஸ்புக் மோகத்துல இருக்காங்க. அவங்க தேவைக்காக உருவான பல விஷயங்கள்லயும் ஏற்கெனவே நாம சிக்கித் தவிக்கிறோம். இப்ப, ஃபேஸ்புக். படிக்கற பிள்ளைகளுக்கு இது தேவையே இல்லை'’ என்ற உமாசங்கர், அடுத்து சொன்னது அதிர்ச்சி ரகம். அது -

''என் பொண்ணு டென்த் படிக்கறா. அவ கிளாஸ்மேட்டோட கஸின்சிஸ்டர், தன்னைப் பத்தி ஒரு பையன் ஃபேஸ்புக்ல தப்பா பரப்பிட்டான்கறதுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டா. இப்ப சொல்லுங்க... எதை நோக்கி குழந்தைகள செலுத்திட்டிருக்கோம்? படிப்பை மட்டுமில்ல... லைஃபையே டைவர்ட் பண்ணுது ஃபேஸ்புக். குழந்தைகளுக்கு... குறிப்பா, பெண் குழந்தைகளுக்கு இது தேவையே இல்லை.’'

'எல்லாவற்றிலுமேதான் நல்லது... கெட்டது இருக்கிறது. புரிந்து நடந்தால் எதிலுமே பிரச்னை இருக்காதே' என்பதுதான் இந்த விஷயத்தில் பலரும் சொல்லும் பொதுவான கருத்தாக இருக்கும். புரிந்து கொள்ளும் வயது வரும்வரை பொறுத்திருக்க சொல்வதுதானே புத்திசாலித்தனம்! சரிதானே தோழிகளே!

உரிமையுடன்

ஆசிரியர்