Published:Updated:

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

Published:Updated:

பெருச்சாளிகள் இருக்க, சித்தெறும்புகளை அடிப்பானேன்?

அன்பு வாசகர்களே

டீசல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் வீதம் துணிச்சலாக உயர்த்தி இருக்கிறது மத்திய அரசாங்கம். கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்திய போதிலும் டீசல் மீது கைவைக்காமலே இருந்தது. காரணம், டீசல் விலையை உயர்த்தினால் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறும் என்கிற அச்சம்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விலையேற்றத்தை தவறு என்று சொல்ல முடியாது. காரணம், கடந்த பல ஆண்டுகளாகவே டீசல் விலை உயர்த்தப்படாததால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு 13 - 15 ரூபாய் வரை நஷ்டம் கண்டன. எவ்வளவுதான் இந்த நஷ்டத்தைத் தாங்க முடியும்? கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்கிற மாதிரி கஜானா காலியாகும்போது இதை செய்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

##~##
ஆனால், அரசு நிறுவனங்களுக்கு நஷ்டம் வருகிறது என்கிறவுடன் மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் டீசல் விலையை உயர்த்துகிற அரசாங்கம், தனக்குச் சொந்தமான சொத்துகளையும் வளங்களையும் யார் யாரோ கொள்ளை அடித்துச் செல்ல மட்டும் எப்படி அனுமதிக்கிறது? 2ஜியிலும், நிலக்கரி சுரங்க அனுமதி அளிப்பதிலும் அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்க வேண்டிய பல லட்சம் கோடி ரூபாயை இழக்க இந்த அரசாங்கம் எப்படி ஒப்புக்கொண்டது?

தன்னையும், தன்னை அண்டிப் பிழைப்பவர்களும் இஷ்டம்போல கொள்ளை அடிக்கத்தானே அரசு வளங்களை பயன்படுத்துவது பற்றி எந்த தெளிவான விதிமுறையையும் கொண்டு வராமல் இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்! அரசின் வளங்களை சரியான விலைக்கு விற்று, பண முதலைகளிடமிருந்து ஒழுங்காக வரி வசூலித்தாலே போதுமே, ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டிய அவசியமிருக்காதே! பெருச்சாளிகள் பல இருக்க, சித்தெறும்புகளை அடித்து நசுக்குவானேன்?!  

-ஆசிரியர்.

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism