பிரீமியம் ஸ்டோரி

எழுச்சியில் தொடர்ந்து பங்கேற்போம்!

அன்பு வாசகர்களே

ங்குச் சந்தை கடந்த பதினேழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உற்சாகமாக உயர்ந்து நிற்கிறது. இந்த ஏற்றத்தைக் கண்ட பல லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றனர். இத்தனை நாளும் நம்பிக்கையோடு காத்திருந்ததற்கு பலனாக கை நிறைய கணிசமான லாபம் பலருக்கும் கிடைத்திருக்கிறது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் பங்குச் சந்தை சரிந்தபோது, இனியாவது பங்குச் சந்தை எழுவதாவது என்று நினைத்து, சந்தையை விட்டு வெளியேறியவர்கள் பல ஆயிரம் பேர். ஆனால், சர்வதேச அளவில் பல பொருளாதார சிக்கல் இருந்தபோதும், நம் சந்தை கம்பீரமாக உயர்ந்து பழைய உச்சத்தைத் தொட்டுவிடும் நிலையில் இருக்கிறது. இந்த ஏற்றத்தைப் பார்த்தால், இனிவரும் காலத்தில் சந்தை மீது எந்த அவநம்பிக்கையும் கொள்ளத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.    

##~##
மத்திய அரசு சமீபத்தில் செய்திருக்கும் சில சீர்திருத்தங்களே சந்தை இந்தளவு உயரக் காரணம் என்கிறபோது, பல ஆண்டுகளாகவே கிடப்பில் இருக்கும் முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தால், சந்தை இன்னும் எவ்வளவு உயரும்!

விரிவாக்கப் பணிகளுக்கு டாடா ஸ்டீல் நிறுவனம் 35 ஆயிரம் கோடி ரூபாயும், ஹிண்டால்கோ நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாயும் கடன் வாங்கியுள்ளதைப் பார்த்தால் வளர்ச்சிக்கான காலம் ஆரம்பித்துவிட்டது என்றே தோன்றுகிறது. மேலும், வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு அதிகரித்துள்ளதால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியும் மேம்படும். அப்போது நமது ஜி.டி.பி. வளர்ச்சி 6.3% - க்கு மேலே செல்லும் என எதிர்பார்க்கலாம்.

இப்போதும் சில பொருளாதார சிக்கல்கள் இருந்தாலும், நீண்ட கால நோக்கில் நம் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது. அந்த வளர்ச்சியில் நாம் பங்கேற்க வேண்டுமெனில், நாம் என்றைக்கும் சந்தையில் இருக்கிற மாதிரி நம்மை பார்த்துக் கொள்வது அவசியம். இனியாவது சந்தையின் எழுச்சியில் தொடர்ந்து பங்கேற்போம்!                    

- ஆசிரியர்.

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு