Published:Updated:

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

வரவேற்போம்; கறாராகவும் இருப்போம்!

அன்பு வாசகர்களே

ன்ஷூரன்ஸ் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அமைச்சரவை. விமானத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த சூட்டோடு, இன்ஷூரன்ஸ் துறையிலும் இப்படி ஒரு அறிவிப்பை செய்தது நமது பொருளாதார வளர்ச்சியை அடுத்தக் கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்ஷூரன்ஸ் துறை நம் நாட்டில் செயல்பட்டும் மிகச் சில சதவிகித மக்களையே சென்றடைய முடிந்துள்ளது. இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும் நன்மையை நம் நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களும் அனுபவிக்க வேண்டுமெனில், அத்துறையில் இன்னும் அதிகமான முதலீடு வேண்டும். இந்திய நிறுவனங்களால் மட்டுமே அந்த முதலீட்டை செய்துவிட முடியாது என்கிறபோது, அந்நிய முதலீட்டை கொண்டு வருவதில் தவறு எதுவும் கிடையாது என்பதே நாட்டு நலன் விரும்புபவர்களின் கருத்து.

##~##
ஆனால், அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பதோடு நம் கடமை முடிந்துவிடவில்லை. நம் நாட்டுக்கு வரும் நிறுவனம் எவை, அதன் தராதரம் என்ன, எந்த நோக்கத்தில் இங்கு வருகிறது, பணம் சம்பாதிப்பது மட்டுமே அதன் குறிக்கோளா, நாளைக்குத் திடீரென அந்த நிறுவனம் கடையைக் காலி செய்து, ஓடிவிட வாய்ப்பு இருக்கிறதா என்கிற நோக்கில் அலசி ஆராய்ந்தபிறகே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

காரணம், ஆயுள் இன்ஷூரன்ஸ் என்பது நீண்ட காலத்துக்கானது. சாதாரண மக்கள் பல சிரமத்துக்கிடையேதான்  இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியத்தைக் கட்டுகிறார்கள். அந்த பணத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாதபடிக்கு கறாரான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வருவது அரசின் கடமை.

- ஆசிரியர்

அன்பு வாசகர்களே
அன்பு வாசகர்களே